Saturday, July 17, 2010

புராணங்கள்

புராணங்கள்*
இதிகாசங்கள்,வேதங்கள் ஆகியவற்றில் உள்ள நுண்ணிய விஷயங்களையாவரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் புராணங்கள் விவரிக்கின்றன.''புராணங்கள்'' என்ற சொல்லுக்கு 'மிகப் பழமையானது' என்று பொருள்.சரித்திர காலத்திற்கு முன்பே புராணங்கள் இருந்து வந்துள்ளன.மகா பாரதம், இராமாயணம் போன்ற புராணங்களில் நாம் வாழ்க்கையில் அன்றாடம் கடைப் பிடிக்கத்தக்க விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. ஆதி சங்கரர், பாணர் போன்றவர்கள் தங்கள் நூல்களில் புராணங்களைப் பற்றி கூறுகின்றனர். புராணங்களில் 18 சிறிய உபபுராணங்களும் இருப்பதாகக் கூறுகின்றனர்.


* **விஷ்ணு புராணங்கள் *:- இவை புராணங்களளில் முக்கிய பங்கைப் பிடிக்கின்றன.ஆறு அம்சங்களைக் கொண்ட ஐந்து முக்கிய பிரிவுகளைக் கொண்டவை. முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு புராணம் மிகவும் பழையானது.பராசர மகஷிரி, மைத்ரேயருக்கு கற்றுக் கொடுத்ததே கற்றுக் கொடுத்ததே விஷ்ணு புராணமாகும்.
விஷ்ணு புராணத்தை ஆவணி மாதம் பவுர்ணமி அன்று அன்பளிப்பாகத் தாரை வார்த்துக் கொடுத்தால் அவர் விஷ்ணு பதத்தை அடையலாம் என்பது ஐதீகம். விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றி கூறும் பிரசித்தி பெற்ற பாகவத புராணம் 12 ஸ்கந்தர்களாகப் பிரிக்கப்பட்டு 18000 ஆயிரம் சுலோகங்களைக் கொண்டிருக்கின்றது.


*நாராதீய புராணங்கள்:-* இது 25000 ஆயிரம் சுலோங்களளை உள்ளடக்கியது. நாரத மகரிஷி சனத்குமாரருக்கு உபதேசித்ததே நார தீய புராணமாகும்.இந்த புத்தகத்தை ஐப்பசி மாதம்,பவுர்ணமி அன்று அன்பளிப்பாகக் கொடுத்தால்,செழிப்பாக வாழலாம் என்பது ஐதீகம்.

* கருட புராணம்:-* விஷ்ணு கருடனுக்கு கூறுவதே கருட புராணமாகும். மருத்துவம்,இலக்கணம்,வான் ஆராய்ச்சி போன்றவற்றை விவரிக்கிறது.மரனத்திற்குப் பின்னர் மனிதன் அடையும் நிலையைப் பற்றியும் கூறுகிறது.8000 ஆயிரம் சுலோகங்களை உள்ளடக்கிய இப்புராணத்தை ஒரு தங்க அன்னப்பட்சியுடன் கொடுத்தால்,செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

* பத்ம புராணம்:-* 55000 ஆயிரம் சுலோங்களைக் கொண்டு ஆறு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரம்மனின் பத்ம ஆசனத்தைப்பற்றியும் விரிவாகக் கூறுகிறது. இந்தப் புராணத்தை சித்திரை மாதம் ஒரு பசுவுடன் அன்பளிப்பாகக் கொடுத்தால் செழிப்பாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.

* வராக புராணம்:-* விஷ்ணுவின் அவதாரத்தையும் வராகத்தின் கதையையும் விவரிக்கின்றது.14000 ஆயிரம் சுலோங்களைக் கொண்டஇப்புரணத்தை சித்திரை மாதம் ஒரு பசுவுடன் அன்பளிப்பாகக் கொடுத்தால் செழிப்பாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.

* பிரம்ம புராணம்;-* 25000 ஆயிரம் சுலோங்களைகளைக் கொண்டது.பிரம்மன் தட்சனுக்குக் கூறியது. வைகாசி மாத பவுர்ணமி அன்று இப்புராணத்தை அன்பளிப்பாக கொடுத்தால் சொர்க்கலோக பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* பிரம்மாண்ட புராணம்:-* பிரபஞ்சம் ஒரு தங்கமயமான முட்டையில் இருந்து தோன்றியதாக பிரபஞ்சத்தின் வரலாற்றை கூறுகிறது.இந்நூல் 12000 ஆயிரம் சுலோங்களைக் கொண்ட இந்நூலை ஒரு பிராமணருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் மிகவும் நல்லது என்று கூறுகிறது.

*பிரும்ம வைவர்த்த புராணம்:-* பிரும்ம காண்டம்,பிரக்ருதி காண்டம்,கணேச காண்டம்,கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகியவற்றைக் கொண்டது.18000 சுலோங்களை கொண்ட இப்புராணத்தை இலையுதிர் காலத்தில் அன்பளிப்பாக கொடுப்பது புனிதமானது

* மார்க்கண்டேய புராணம்:-* மிகப் பழமையானது. 'தேவி மகாத்மியம்' என்ற பகுதியைக் கொண்டது. கார்த்திகை மாதம்,அமாவாசை அன்று ஒரு பிராமணனுக்கு இந்நூலை அன்பளிப்பாகக் கொடுத்தால், உத்தமம் என்று நமப்படுகிறது.

*பவிஷ்ய புராணம்:-* பிற்கால நிகழ்வுகளைப் பற்றி மனுவுக்கு சூரியன் கூறியது.தலங்களைப் பற்றியும் யாத்ரீகர்களின் உரிமைகளைப் பற்றியும் கூறும் இந்நூலை பங்குனி மாத பவுர்ண்மி அன்று பிராமணனுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

* வாமன புராணம்:-* விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களைப் பற்றியும் பார்வதி, பரமேஸ்வரனின் திருமணக் காட்சிகளைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.10,000 சுலோங்களைக் கொண்ட இந்நூலை இலையுதிர் காலத்தில் அன்பளிப்பாக கொடுத்தால் உத்தமம்.

* வாயு புராணம்:-* கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்ட என்பவரைப் பற்றியும் 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குப்த அரசர்களைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது. 14000 சுலோகங்களைக் கொண்ட இந்நூலை ஆவணி மாதம் அன்பளிப்பாகக் கொடுத்தால் உத்தமம்.

* லிங்க புராணம்.:-* 28 விதமான சிவனின் உருவங்களைப் பற்றி கூறுகிறது. 12000 சுலோகங்கள் கொண்ட இந்நூலை பங்குனி மாதம் பவுர்ணமி அன்று பிராமணன் ஒருவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் சிவ சாயுச்சியத்தைப் பெறலாம்.

* ஸ்கந்த புராணம்:-* காளிதாசர் இயற்றிய குமார சம்பவம் என்ற நூலுக்கும் அசுரனை வதம் செய்த கந்தனால் கூறப்படும் இந்த புராணத்துக்கும் ப்ல ஒற்றுமைகள் உள்ளன.

*அக்னி புராணம்:-* அக்னிதேவன் வசிஷ்டருக்கு உபதேசித்தது.சிவலிங்கம் துர்க்கை,இராமர்,கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களைப்பற்றி கூறுகிறது.12000 ஆயிரம் சுலோங்களைக் கொண்ட இந்நூல் நாடகம்,சோதிடம்,சிற்பம் போன்ற நுண்கலைகளைப்பற்றியும் கூறுகிறது.

*மத்ஸ்ய புராணம்:-* மனுவுக்கு விஷ்ணுவின் அவதாரமான மத்ஸ்யம் கூறுவது இந்நூல்.ஜைனம்,பவுத்தம், நாட்டியம்,ஆந்திராஜ வம்சங்கள்ஆகியவற்றை விரிவாக்கிறது. 13000 சுலோகங்கள் கொண்ட இந்நூலை தங்கத்தில் செய்த மீன் உருவத்துடன் அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும்.

*கூர்ம புராணம்:-* ஆமை வடிவமெடுத்து விஷ்ணு,இந்தரயும்ன்னின் சரித்திரத்தைக் கூறும் விதமாக இந்நூல் அமைகிறது.ஏழு தீவுகள்,ஏழு கடல்கள் ஆகியவை சூழ்ந்த ஜபூத்வீயம் என்ற பரத்தைப் பற்றி விவரிக்கிறது.இந்நூல் 8000 ஆயிரம் சுலோங்கள் கொண்ட இந்நூலை,ஒரு தங்க ஆமை உருவத்துடன் அன்பளிப்பாகக் கொடுத்தால் மிகவும் நல்லது



விஷ்ணு புராணம்: http://jagadhguru-purana.blogspot.com/

No comments:

Post a Comment