Wednesday, October 26, 2011

யோகம்

(சித்தர்கள்) Its Real or Not.
What Is the Difference between YOGA & THIYANAM. (யோகத்தின் உச்சம் சித்தர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை)

யோகா (சமசுக்கிருதம், பாலி:योग yóga ) என்பது இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவ்ழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறி. இது உடல்உடையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றம் ஒழுக்கங்களைப் பற்ரிய நெறி. இந்தச் சொல் இந்துமதம், புத்தமதம், சமண மதம் ஆகியவற்றில் உள்குதல் அல்லது தியானம் செய்தல் என்னும் பயிற்சி முறைகளோடு தொடர்புடையது இந்துமதத்தின் ஒரு சாராரின் கூற்றுப்படி இது இந்து தத்துவத்தின் (ஆறு வைதீகமான) ஆச்சாரங்கள் நிறைந்த பள்ளிகளில் ஒன்றைக் குறிக்கிறது; அதன் பயிற்சிகளை அதன் குறிக்கோளை நோக்கி இயக்குகிறது. யோகா என்ற சமசுக்கிருத சொல்லுக்கு பொருள்கள் பல உள்ளன.மற்றும் இது சமசுக்கிருதத்தின் வேரான யுஜ் -பொருள்- கட்டுப்படுத்துதல், ஒன்று படுத்துதல்/ஒருங்கிணைத்தல் என்ற வார்த்தையில் இருந்து வந்துள்ளது.மொழிபெயர்த்தலில், பொருத்துதல், ஒருங்கிணைத்தல்'இணைந்த,மற்றும் “பொருள்கள்” ஆகியவை அடங்கும். இந்தியாவிற்கு வெளியே, யோகா என்ற தனிப்பட்ட சொல் ஹத யோகாவுடன் சம்பந்தப்பட்டது மற்றும் இதன் ஆசனங்கள் (அமரும் முறைகள்) அல்லது ஒரு வகை உடற்பயிற்சி எனப்படும்.யோகாவை பயிற்சிசெய்பவர்கள் அல்லது யோகா கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் யோகி அல்லதுயோகினி என்று அழைக்கப்படுகின்றனர்.தூக்கத்தின் பொழுது நம்மை அறியாமல நாம்தியானத்தில் ஈடுபடுகிறோம்.

நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தெரிந்தோ, தெரியாமலோ நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் செல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்க துவங்கவேன்டும்.கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணம்.மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணி செய்யக்கூடாது.காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்கு தெரிந்து நடந்திடக்கூடாது.மூச்சுகாற்றை சுவாசிப்பதும்,வேளியேனுப்புவதும் தண்னிச்சையாக நடைபேற வேண்டும்.நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம்.இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கோடுக்காதீர்கள்.எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கோள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.அப்போழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்த நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக்கொள்ளும்.இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம்.இதுதான் தியான நிலை.இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.தியானம் அதிகமாக செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பெறும்.பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும்.இதை தெய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.உறக்கத்தின் போழுது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடநுகு விரிவடைய செய்கிறது.நம்முடைய “ஆறாவது அறிவின்” கதவை திறக்கவும் விரிவடையவும் இது உதவுகிறது.தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்தி நம்மை சந்தொஷப்டுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவோம். மேலும் பல சிகரங்களை தொடசெய்யும்.தியானம் என்பது ஒரு பயணம். தியானத்தின்போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு அறிவாற்றலிலிருந்து நமக்குள் பின்பு அதையும் தாண்டி “தியானம்” பெற்றுகொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்பது பொன்ற செயல்களையும். “தியானம்”செய்யும் முறை நாம் தெரிந்து கொள்ளலாம். தியானத்தின் போழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலை கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமர செய்வது.எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில்.அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம்.தரையில் அமர்ந்துகொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்துகொண்டோ தியானம் மேற்கோளள்லாம் நமக்கு எந்த இடத்தில் அமர்ந்துகொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்துகோண்டு தியானம் செய்யலாம்.வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.கால்களை சப்பணமிட்டுக் கொள்ளுங்கள்.இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக் கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள்.அமைதியான நிலையில் சகஜ நிலைக்கு வாருங்கள்.உங்கள் முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தல் அவசியம்.மந்திரங்களை ஓதும்பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.நம்முடைய உடல் முற்றிலும் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.மனம் மற்றும் அறிவு நிலைக்கு மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.மன தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.

யோகம் என்ற சொல் ‘யுஜ்’ என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு “ஒருங்கிணைத்தல்” அல்லது “எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்” என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ஜபம் எனப்படும். சிவபெருமானுக்கு யோகி என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே யோகத்தின் தலைவனாகவும், பிறப்பிடமாகவும் சிவபெருமானைக் குறிப்பிடலாம். சிவபெருமான் ஆதியில் மகேந்திர மலையில் தமிழ்நாட்டு முனிவர்கள் நால்வருக்கு ஒரு மரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்தார் என்று தேவாரத்திலும் திருவாசகத்திலும் நன்கு எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. சிவபெருமான் இந்த நான்கு முனிவர்களுக்கு காட்சி அளித்தது. தட்சிணாமூர்த்தம் என்று கூறப்படும். அந்த தட்சிணாமூர்த்தம் ஆறில் சிவபிரான் ஞானதட்சிணாமூர்த்தியாகவும், யோக தட்சிணாமூர்த்தியாகவும் காட்சி அளித்துள்ளார். யோக தீட்சை என்பது குரு யோக மார்க்கத்தால் சீடனது உடலுள் பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்து சிவன் திருவடியில் சேர்ப்பிக்கும் தீட்சை வகையாகும்.
சிவமன்றி வேறே வேண்டாதே – யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே – நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே.
பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
இந்த உயிருள்ள சவமானது சிவத்தை தவிர வேறொன்றையும் வேண்டகூடாது, யவருக்கும் இடையில் சண்டை மூட்டக்கூடாது, தவ நிலையான யோகத்தை விட்டு செல்ல (தாண்ட) கூடாது, நல்ல சன்மார்க்க நூல்களை வேண்டி விரும்பி கொள்ள வேண்டும், அவ்வாறு அல்லாதவைகளை வேண்ட கூடாது. யோகாசனம் செய்வதால் உடல் ஆரோக்கியம் பெருவதுமட்டும் இல்லாமல் ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு, மனஅமைதி பெறுகிறோம். யோகாசனம் செய்வதற்கு சரியான நேரம் காலைநேரம், காரணம் காலை நேரத்தில் உடல் சுறுசுறுப்புடன் மனம் தெளிவாக இருக்கும். காலைகடன்களை முடித்துவிட்டு பின் பச்சை தண்ணீரில் குளிக்கவும் அல்லது மிதமான நீரில் குளித்தபின்பு நாம் யோகாசனம் செய்யலாம். ( பச்சை தண்ணீரில் குளித்தால் மிகவும் நல்லது ) உணவு உண்ணகூடாது வெறும் ( காலி வயிறாக ) வயிறாக இருக்கவேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் மட்டுமே குடித்தால் போதுமானது மலை நேரத்திலும் யோகாசனம் செய்யலாம் கண்டிப்பாக உணவு உண்ணகூடாது வெறும் ( காலி வயிறாக ) வயிறாக இருக்கவேண்டும் . . . யோகாசனங்கள் செய்வதற்கு முன்பு சில முன் பயிற்சிகள் உள்ளன. அதை முடித்த பிறகு, கீழே உள்ள ஆசனங்களை தினமும் செய்து வர, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் பெறலாம்.

யோகா கலையின் தோற்றம்.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்கத்தைய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்கப்படுகிறது. லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள். சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்.ஆனால் இந்தக்கலையைக் கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.இன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்சியைக் கொடுக்கிறது. இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள். தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். இதன் பெருமையைச் சிலாகிக்கிறார்கள். இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம்செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நண்பர், எதிர்த்த வீட்டுத் தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, சாலை சரியில்லாதது, காப்புறுதி, கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி.இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது.இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம். நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்.உட்கார்ந்து எழுந்து, கையைக் காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா.

யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாது. யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை. கல்வி பயில்வதற்கு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது. யோகம் என்றால் என்ன? யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு “ஒருங்கிணைத்தல்” அல்லது “எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்” என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ஜெபம் எனப்படும். அறிவியல் கலை யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்தி பெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம். யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும். சிவயோகம் இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பெரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்த கலை என்பதும் தெறிந்ததே. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிவனெறியாளர்களே. யோக முறை யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.

யோகப் பயிற்சியின் சிறப்புகள்
1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.
2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.
3. சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.
4. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.
5. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.

ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:
1. ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.
2. முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.
3. பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.
4. மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.
5. தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.
6. உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது.

வேத சம்கிதைகளில் தவத்தைப் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன, தவப் பயிற்சிகளான தவங்கள்[Brāhmaṇas](900 முதல் 500 BCE) இல் முந்தைய வேத வர்ணனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் உள்ள சில இடங்களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தில் (c. 3300- 1700 B.C.E) இருந்த சில கண்டெடுக்கப்பட்ட உருவங்களின் அமர்ந்திருப்பது போன்ற நிலைகள் சாதாரண யோகா அல்லது தியான நிலைகளைக் காட்டுவது போல் உள்ளன மேலும் இது ஒரு வகையான சடங்கு முறையை, யோகாவின் ஆரம்பமாகக் காட்டுகிறது. இது க்ரெகொரி போஷ்செல் என்ற தொல் பொருள் ஆய்வாளரின் கூற்று. இந்து பள்ளத்தாக்கு சின்னங்களுக்கும், பின்னாளில் வந்த யோகா மற்றும் தியானப் பயிற்சிகளுக்கும் இடையில் ஏதோ ஒரு வகை சம்பந்தம் உள்ளதை முடிவான சாட்சிகள் இல்லாவிட்டாலும் , அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.நமது முன்னோர்களாகிய யோகிகளும், ஞானிகளும் ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உடல், உள வளத்தையும், நலத்தையும் கொடுக்கின்ற வழிமுறைகளைத் தெளிவாகக் கூறிச் சென்றுள்ளனர். இவற்றுள் முக்கியமானவையாக யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி தாவரஉணவுமுறை, ஆயுர்வேத வைத்தியமுறை என்பவற்றைக் கருதமுடியும். நம் முன்னோர்களால் 84 இலட்சம் வரையிலான யோகாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கற்றறிந்தோர் கூறியுள்ளனர்.யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி என்பன ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன.

பதஞ்சலி யோகம் என்றும் அஷ்டாங்க யோகம் என்றும் அழைக்கப்படும் யோக முறைகள் பதஞ்சலி என்ற முனிவரால் உருவாக்கப்பட்டவை. பழங்காலத்தில் பதஞ்சலி முனிவரின் தரிசனமாக (மதமாக) இவை கடைபிடிக்கப் பட்டிருக்கலாம். இந்த அஷ்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்களை கொண்டது.அஷ்டாங்க யோகத்தில் முதலாவது யமம் – அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவை கொண்ட வாழ்வே “யமா” அல்லது யமம் எனப்படும். அடுத்தது நியமம்,தூய்மையாக இருத்தல், சுகம் துக்கம், பிடித்தது பிடிக்காதது என்று நேரும்போது அமைதியாய் நடுநிலையாய் இருத்தல், தவம், கற்றல், எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும்.இதுவரை சொன்னவை வாழ்க்கைமுறை. இனி உள்ளத்துக்காக செய்யக்கூடிய த்யான முறையாவன,அசைவின்றி சுகமான வகையில் கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும். ஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது. சுவாசங்கள் பலவகைப்படும். அத்தகைய சுவாசங்களுக்கு கால அளவுகளும் உண்டு.புலன்களை அடக்குதல், மனதை பழக்கி ஒருநிலை கொண்டு அதிலேயே அடங்கிவிடும் நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும்.ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, மற்ற எல்லா இடையூறுகளையும் விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும்.தாரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் “தைலதாரை” என்ற எண்ணை கொட்டுவதைப்போல் இடைவிடாமல் தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும்.இந்த அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும்.எதை தாரணா மற்றும் த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டவது நிலையாகும். இதற்கு முந்தைய நிலைகளில் செய்பவர், செயல், அதன் விளைவு என்பது இருக்கிறது. ஆனால் சமாதி நிலையில் இவையெல்லாம் ஒன்றாக கலந்து விடுகின்றன.
யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
தியானா (தியானம்)
சாமாதி (தீர்வு) இதில் குறிப்பிட்ட யோகாவை எடுத்துக்கொண்டால் அதில்
பக்தி யோகா
கர்ம யோகா
பதஞ்சலி யோகா முறை
ஜனன யோகா
ஹத்த யோகா
குண்டலினி யோகா என்று பிரிவுகள் உண்டு... யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனத்துக்கு பயனளிக்கும் வகையில் செறிந்துள்ளது.
யோகாசனம்

யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்ய து வைத்ய கேன !
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ !!

யோகத்தின் எட்டு அங்கங்கள் என வர்ணிக்கப்படும்.
1.இயமம்:பிறரை கொல்லாதிரு மனதாலும், உடலாலும்.பிரம்மசரித்திரு, தூய்மையாய் இரு-மனதாலும், உடலாலும்.இது இயமம்
2.நியமம்:மெய் வாய்யில் இறைமை, வாய்யில் எப்பொழுதும் மெய்,கலவாதிரு, களவாதிரு.இதுநியமம்.
3.ஆசனம்: ஆசான் இல்லாத ஆசனம் ஆதாரம் இல்லாத ஆசனம்.எங்கும் ஆசனம் எதிலும் ஆசனம்.உன்னை ஆக்கு ஆசனம். அதுவே இறையின் அரியாசனம்.
4.பிராணாயாமம்:உனது உயிர் சக்தியை வசமாக்கு- அதுவே பிராணனின் யாமம்.உனது நவ துவாரத்தில் பயணிக்கும் சக்தியை திறந்து மூடு.உன் உடல் எனும் புல்லாங்குழலின் துவாரங்கள் வழியே ஓடும் இசையாக மாறும் உனது உயிர்சக்தி.:(பிராணாயாமம்)
5.ப்ரதியாகாரம்:அஞ்சும் சிங்கங்களாக இருக்கும் ஞானேந்திரியத்தை ஐந்தும் சிங்கங்களாக்குபிற உலகில் நில்லாமல் அக உலகில் இருப்பதேப்ரதியாகாரம்.
6.தாரணை: நீரில் உள்ள சலனம் எண்ணெயில் இல்லை.நீர் இல்லா உலகில் எண்ணமில்லா நிலையே தாரணை.
7.தியானம்:செயல் கடந்து செயல் மறந்து அகம் அகழ்ந்து நின்று,தானே செய்யாமல் தானே செயல்படுவது தியானம்.
8.சமாதி:ஆதியானவனுடன் சமமாவதே சமாதி.நீயே பிரம்மனாம் அது அகம் பிரம்மாஸ்மி-யாம்.நீயே சத்தியம் அது தத்வமஸி.நீயே அனைத்துமாம் அதுவே சமாதி.
பொதுவாக யோகாசனம் என்றாலே உடலை வளைத்து செய்யும் பயிற்சி என்று பெண்களும் , வயதானவர்களில் பெரும்பாலனோர் கருதுகின்றனர்.யோகத்தின் எட்டு அங்கங்கள் பகுதிதான் ஆசனம்.நீண்ட நேர தியானத்திற்கு புலக்கட்டுபாடு, மன ஒருமைப்பாடு தேவைப்படுகிறது. உடலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். எனவே சில ஆசன பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலை நன்றாக வைத்துக்கொள்ள முடியும். நீண்ட நேர தியான பயிற்சிக்கு ஆசனம் உதவுகிறது.

யோகம்+ஆசனம்(யோகாசனம்).அது நமது ரிஷிகள் நமக்கு அளித்த கொடை.பதஞ்சலி மகரிஷி யோகத்தை நமக்கு தொகுத்தளித்தார். அது இந்தியாவின் பெரும் செல்வம். பொதுவாக இன்றைய சூழ்நிலையில் மக்கள் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதைப் போல நோயுற்று இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம் என்று யாராலும் இன்று மகிழ்வாக சொல்ல முடியவில்லை.யோகத்தின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றுவர்கள் யாராக இருந்தாலும் இறைக் கலப்பு என்பது அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று.உள்ளமும், உடலும் தூய்மையாக, ஆற்றலாக திகழ யோகாசனம் அவசியம். இதில் யோகம் என்பது உள்ளத் திற்காகவும், ஆசனம் என்பது உடலுக்காகவும் செய்யப்படுகிறது. இந்த யோகாசனத்தால் தான் மனித வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.யோகசனத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்கிறார்கள். சிலர் உடலுக்குரிய ஆசனங்களை பயிலுவது தான் யோகாசனம் என்றும், ஒரு சிலர் தியானம் பயிலுவது யோகாசனம் என் றும், வேறுசிலர் மூச் சுப்பயிற்சி (பிராணாயமம்) செய்வதுதான் யோகாசனம் என்றும், இன்னும் சிலர் உண்ணாவிரதம் போன்ற விரதங்கள் இருப்பதே யோகாசனம் என்றும் கூறுகிறார்கள்.ஆனால் பதஞ்சலி ஒருவர் மட்டுமே உள்ளத்தின் ஆற்றலை பெருக்க யோகப்பயிற்சி, உடலின் ஆற்றலைப் பெருக்க ஆசனப் பயிற்சி என இரண்டையும் ஒன்று சேர்ப்பதே யோகாசனம் என தெளிவாக்கியவர்.பதஞ்சலி முனிவர் துவாபரா யுகத்தில் வாழ்ந்தவர். இவர் ஆதிசேஷன், லட்சுமணன், பலராமன், ராமானுஜர் என பல அவதாரங்கள் எடுத்தவர். இவர் இந்த உலக மக்களின் நலன் கருதி மனதுக்கு யோக சூத்திரமும், உடலுக்கு சரகம் என்ற வைத்திய நூலும், வாக்கிற்கு வியாகரண பாஷ்யம் போன்ற நூல்களை தந்தவர்.யோகம் என்றால் .கால்களை , கைகளை நீட்டி மடக்கி செய்யும் ஆசனப் பயிற்சிகள் என்பது யோகப்பயிற்சியின் ஒரு அங்கம் . மனிதர்களின் வயது மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப சிறிது ஆசனப் பயிற்சி செய்தால் போதுமானது.யோகப் பயிற்சியின் நோக்கம் மனிதன் தன் சுயத்தை உணர்ந்து இறைவன் என்பதை அறிந்து முடிவில் இறைக் கலப்பு அடைவதே.ஆனால் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட சிறிதளவு யோகப் பயிற்சியினை கையாண்டாலும் அது மனிதனின் உடல் மற்றும் மன நலத்தை சீர்ப்படுத்தும் ஒரு மருந்தாய் அமைகின்றது என்பதில் வியப்பில்லை.ஒரு நிமிடம் இந்த யோகப் பயிற்சியனை நமக்களித்த உண்மைக் குருமார்களின் தூய நோக்கத்தினை அவர்கள் நினைத்து தங்கள் வாழ்க்கையினை அதற்காக அவர்கள் அர்ப்பணித்து அதற்காக அவர்கள் சிறு புகழுக்கு கூட ஆசைப் படாமல் உலக உயிர்களின் மீது உள்ள கருணையினால் பயிற்சிகளை நெறிப்படுத்தி மனிதர்களின் தன்மைக்கு ஏற்றார்போல பயிற்சிகளை பயிற்றுவித்தவர்கள் ரிஷிகள், குருமார்கள். உடல் , மன சக்திகாகவும் மற்றும் ஜீவ முக்திக்காகவும் இன்று யோகத்தை ஆர்வத்துடன் பயில்பவர்கள் ஏராளம், ஏராளம். ஆரம்பத்தில் யோகம் பயில விரும்பும் , முயலும் அன்பர்கள் மிக்க மன விழிப்புடன் சரியான பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை சென்றடைந்து பயிற்சியினை அடிப்படை ஒழுக்கத்துடனும் , உயர்ந்த நோக்குடனும் பயில்வார்களேயானால் அவர்களுக்கு சத்குரு பதஞ்சலி மகரிஷியும், சித்த புருஷர்களும் அவர்களின் யோக வெற்றிக்கு துணை நிற்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

உலகில் 84 இலட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன.எனினும் இவைகளில்18 வகை ஆசனங்கள் தான் மிகமுக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன . மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தால் வெளியிடப்பட்ட இந்த வலைப்பதிவில் பொதுவாக யோக விஷயங்களையும் உடல் ஆசனங்களை பற்றியும் விளக்கப்டும். மேலும் ஏற்கனவே ஆசனங்கள் பயின்று தொடர முடியாமல் பாதியில் பயிற்சியினை நிறுத்தியவர்களுக்கு இந்த வலைப்பதிவு ஓரளவு நிவாரணம் தரும் என எண்ணுகிறோம் . யோகம்+ஆசனம் இந்த இரு பயிற்சிகளும் பரந்த கடலுக்கு ஒப்பாகும். இதில் முத்தெடுக்க முனைவோர்தக்க ஆசிரியர் ஒருவரிடம் முறையாக கற்பதனால் உடல் வளமும். மன நலனும் பெற்று இறையருளை அடைவது நிச்சயமே. சாதகர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிட கேந்திரந்திரத்தினை அணுகலாம். மனம் என்பது ஆத்ம ஸ்வரூபத்தின் ஒரு சக்தி. எல்லா நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. அன்நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கும்போது மனம் அங்கு தனியாக இருப்பதில்லை. நினைவுதான் மனதின் உருவம்.எண்ணம்.உலகின் எல்லா நிலைகளையும் உருவாக்குவது எண்ணங்களேயாகும்.வாழலும் சூழலும் எண்ணத்தை உற்பத்தி செய்கின்றன.உடம்பு உணர்வு.உடம்பு உயிர்த் தொகுதியில் சேர்ந்தாலும் அது ஒரு ஜடப் பொருளே. ஆனால்மூன்றாவதாக உணர்வுப் பொருள் அதனுடன் சேரும்போது வாழ்கை நடைபெறத்துவங்குகிறது.

ஐம்பூதங்கள் எனப்படுபவை நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன. இப்பிரபஞ்சத்திலுள்ள பல சூரிய மண்டலங்களில் ஒன்றான நாம் வாழும் இப்பூமியில் இவற்றின் உதவியின்றி எந்தவொரு ஜீவராசியாலும் உயிர் வாழமுடியாது. உதாரணத்திற்கு நம் உடலை எடுத்துக்கொள்வோம்: இரத்தச் சுற்றோட்டத்திற்கும் கலங்கள் இயங்குவதற்கும் நீரும், தாது உப்புக்களுக்கு நிலமும், உடல் வெப்பத்தைப் பாதுகாக்க நெருப்பும், சுவாசிப்பதற்கு வசதியாகக் காற்றும், காந்தகதிருக்கு ஆகாயமும் உறுதுணையாய் நிற்கின்றன.நெல் வளர இவ்வைந்து பூதங்களும் உதவுகின்றன. நெல்லைக் குற்றி அரிசியும் தவிடும் எடுக்கிறோம். இவற்றை நாம் உண்ணும்போது அவற்றிலுள்ள தாது உப்புக்களும், அரிய பூதியங்களும் மற்றும் ஜீவசத்துக்களும் எமதுடலை சென்றடைகின்றன. இதே போன்றே ஐம்பூதங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாமுயிர் வாழ்வதற்கு ஏற்ற துணையாய் நிற்கின்றன.தமிழிலும் ஐம்பூதங்கள் என்று சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் அடிப்படையில் திருவள்ளுவர் பகுத்திருக்கின்றார். நிலம், நீர், நெருப்பு, வளி, விசும்பு என்று இப்புவியை ஐம்பெரும் ஆற்றல்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது தமிழர்களின் நம்பிக்கை. சீனப் பண்பாட்டின்படி ஐந்து பூதங்களும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும் சக்தியின் உருவகங்களாகத் திகழ்கின்றன. இவற்றிலே நீர் பள்ளம் நோக்கிப் பாய்ந்து நிலத்தை ஈரப்படுத்துகிறது. நிலத்தில் ஈரம்பட்டு முளைக்கும் மரத்தின் விறகுகள் ஒன்றோடு ஒன்று உரசி நெருப்பு மூள்கிறது. நெருப்பின் சாம்பல் மண்ணுக்குள் புதைந்து உலோகமாக மாறுகிறது. பள்ளம் நோக்கிப் பாயும் நீர்; ஓங்கி உயர்ந்து எரிந்து வெப்பத்தை உண்டாக்கும் தீ; வளைந்தும் நிமிர்ந்தும் வளரும் மரம்; பலவடிவங்களில் அடித்தும், வார்த்தும் உருவாக்கப்படும் உலோகம்: வளமான மண் இந்த ஐந்து மூலகங்களும் படைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, இவை ஒன்றை ஒன்று அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. எப்படி என்கிறீர்களா? மரம் நெருப்பை உண்டாக்குகிறது. நெருப்பின் சாம்பல் மண்ணுக்கு உரமாகி, உலோகமாக மாறுகிறது; உலோகக் கருவி கொண்டு பூமியைத் தோண்டி தண்ணீர் எடுக்க முடிகிறது. தண்ணீரால் புதிய மரங்கள் முளைக்கின்றன. இவற்றின் இந்த படைப்பாற்றலுக்கு எதிரான அழிவாற்றலைப் பார்க்கலாமா? தண்ணீர் நெருப்பை அணைக்கிறது. நெருப்பு உலோகத்தை உருக்குகிறது. உலோகம் மரத்தை வெட்டுகிறது. மரம் மண்ணைக்கீறி முளைக்கிறது. மண் தண்ணீரில் கரைகிறது.

பல நூற்றாண்டு காலமாக சீன மக்கள் இந்தப் புவியை நான்கு பகுதிகளாக-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளாகவும், வசந்தம், இலையுதிர்காலம், கோடை, குளிர் என்று நான்கு பருவங்களாகவும், டிராகன், வெள்ளைப்புலி, சிவப்புப் பறவை, கருப்பு ஆமை என்று நான்கு விலங்குளாகவும் பிரித்தே பார்த்துவந்தனர். காலப் போக்கிலே, இவற்றுடன் மையப் பண்பு கொண்ட ஐந்தாவது அம்சம் ஒன்றும் சேர்ந்து கொண்டது. இறுதியில் மரம், நெருப்பு, மண், உலோகம், தண்ணீர் ஆகிய ஐம்பெரும் பூதங்கள் இந்தப் புவியை ஆட்டிப் படைக்கத் தொடங்கின. இவை இடைவிடாமல் உருவாகிக் கொண்டே இருக்கும் சக்தியின் உருவகங்களாகக் கருதப்படுகின்றன.சீன மக்களின் கருத்துப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் இந்த ஐந்து மூலகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. ஓராண்டின் ஐந்து பருவங்களும். ஐந்து நிறங்களும், ஐம்புலன்களும், ஐந்து சுவைகளும், எண்களும், உடல் உறுப்புக்களும் இந்த மூலகங்களுடன் இணைத்தே விளக்கப்பட்டன. வசந்த காலத்தில் மரங்கள் வளர்ந்து கோடை காலத்தின் மூலகமான நெருப்பை உண்டாக்குகின்றன. நெருப்பின் சாம்பல் மணணுக்குள் புதைந்து, இலையுதிர் பருவத்தில் கிணறு தோண்டுவதற்குத் தேவையான உலோகமாக மாறுகிறது. கிணறுகளில் இருந்து குளிர் பருவத்தின் மூலகமான தண்ணீர் கிடைக்கிறது.
மனிதனின் சக்தி நிலை

மனிதனின் சக்தி நிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் உள்ளவை.எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவைதான் சக்கரங்கள்.மனித உடலில நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன.மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும்.ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக்கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.
1.மூலாதாரம்: உடலின் அடிப்படையான சக்கரம், இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கும் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.
2.சுவாதிஷ்டானம்: உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருகி ஈடுபடாட்டிற்குக் காரணமானது.
3.மணிப்பூரகம்: உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.
4.அநாகதம்: இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாகத்த்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சம நிலையான தன்மை அநாகதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால் தான், மேல் நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாகத வடிவம்.மேல் நோக்கியமுக்கோணம் அருளியல் வாவுக்கும் கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாகதத்தில் இருந்து உருவானவைதான்.
5.விசுக்தி: என்பது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் சிவபெருமானுக்கு ‘விசுவகண்டன்”; “நீலகண்டன்” என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.
6.ஆக்ஞை: இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு நிகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள்.
7.சஹஸ்ரஹாரம்: இந்த சக்கரம்,பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல், உடை உடுத்துதல் போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள் “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். இந்த ஏழு சக்கரங்களும், வாழ்வின் ஏழு விதமான தீவிரத்தன்மைகள், பெரும்பான்மையான மக்கள் மூலாதாரத்திற்கும் மணிபூரகத்திற்கும் நடுஇல் சக்தி நிலைதூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாகதம் வரையில் அந்த ஆற்றல் துண்டப்படுகிறது.வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே. அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும் துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காதாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர்.ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தூண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்புணர்வும் தேவை. இராமகிருஷ்ணரின் வாழ்வில் அது நிகழ்ந்தது. காளியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், அவ்வப்போதுசில சமாதி நிலைகளை அடைவார். அப்போதெல்லாம் காளியிடம் பேசுவதாக, காளிக்கு உணவு தருவதாக உணர்வார்.சமாதி நிலை கடந்து வெளிவந்ததும், காளியைத்தேடி சிறு குழந்தை போல் அழுவார். ஆக்ஞாவை எட்டியிருந்த அவர் அதைத்தாண்டிச் செல்ல விரும்பவில்லை. சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று. ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லோரும் செய்து விட இயலாது.ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும்போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித் தனியாகத் தூண்டுதும் நல்லதல்ல.ஏழு நிலையிலும் தீவிரத்தன்மை கொண்ட நமது சக்தி நிலை தூண்டப்படும் பொது மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை உணர்கிறான். அதற்கு பிராணாயாமம் போன்ற முறையான பயிற்சிகளே வழி.மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் அருட்பேராற்றல், அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும்.

உடலியலில் ஆசனங்கள் ஆசனங்களும் உடற் பயிற்சிகளும் ஏனைய உடற்பயிற்சிகளில் எல்லாம் சிறந்தவையாக உடலாசனங்கள் என்ற யோகாசன உடலாசன முறைகள் இன்று எண்ணிலடங்கா ஆசன வகைகளை கொண்டதாக பெருகி வருவது ஆராயப் பட வேண்டிய விஷயமாகும். இயல்பாக மனித ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆண்களானாலும், பெண்களானாலும் அமர்ந்து , எழுந்து , நடந்து , கிடந்து, ஓடி , ஆடி, எந்த வித விஞ்ஞான கருவிகளையோ , வாகனங்களையோ உபயோகிக்க அவசியம் இன்றி இருக்க முடியுமானால், மனிதன் அல்லாத ஏனைய உயிரிகளைப் போல நாமும் நலமுடன் வாழ்ந்திட முடியும். இந்த நவீன காலத்தில் எவரும் அவ்வாறு வாழ்ந்திட இயலாத போது , உடலாசனம் ஒன்றே ( யோகாசனம்) போன்ற மனித உயிர்களுக்கு நீண்ட வாழ்நாளையும், நோயில்லா உடலையும் தரும் அரும் சஞ்சீவியாகும். தற்காலத்திய பல நூறு ஆசனங்களில் இருந்து தேவையற்ற ஆசனங்களை நீக்கி ஆசன முறைகளை வரிசைப் படுத்தி உடல்வாகுக்கு ஏற்ற ஆசனங்களை தேர்வு செய்தும் எதிராசனம் போன்ற தவறான பழங் கொள்கைகளை தவிர்க்கும் மனித உடல் அமைப்புகளை ஆசன யோக விஞ்ஞானத்தை நம் முன்னோர்கள் (ரிஷிகள்) கூறியபடி வழி வழியாக வந்த குருமார்கள் உபதேச முறைப்படி அனுபவ பாடமாக இருக்கும் என்பதை தெளிவுப் படுத்துகிறோம்.

மனித உடல் உறுப்புகளை 9 மண்டலங்களாக பிரிக்கலாம்.

1.உடல் மண்டலம்
2. மூச்சு மண்டலம்
3. இரத்த மண்டலம்
4. சீரண மண்டலம்
5. எலும்பு மண்டலம்
6. நரம்பு மண்டலம்
7. தசை மண்டலம்
8. கழிவு மண்டலம்
9. நாளமில்லா சுரப்பி மண்டலம் ( Endocrine )

மேற்குறித்த 9 மண்டலங்களும் சரியான தொகுக்கப் பட்ட சீரான ஆசனங்களால் கட்டுப் படுத்தப்படுவதோடு அவைகளுடைய வளர்ச்சியினையும், செயல்பாடுகளையும் மனித ஆயுட்காலம் வரை அவற்றின் சோர்வில்லாத இயக்கத்தையும் உடலாசனங்கள் வழங்கக் கூடும். மனித உடலுக்கு ஆதாரமாகவும் , அஸ்திவாரமாகவும், இருப்பவை எலும்புகளே உடலில் உள்ள எல்லா எலும்புகளும் அதனை இணைக்கும் மூட்டுகளும் சேர்ந்ததே எலும்பு மண்டலம் . உடலுக்கு ஒரு ஒழுங்கான வடிவமைப்பிற்கு காரணமாகவும் தன் சீரான செயல்பாட்டிற்கு துணை புரிபவையும் எலும்புகளே. உடலில் உள்ள 7 தாதுக்களிலும் மிகக் கெட்டியானதாகவும் , பலம் உடையதாக இருப்பவை எலும்புகளே.முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்ட மற்றும் அவ்வப் போது உருவாகும் தீர்மானங்களை செயல்பட வைப்பதற்கும் , ஒவ்வொரு அணு செயல்படுகாளையும் தன் கட்டுபாட்டில் வைத்து பராமரித்து வருவதோடு , உயிர் இயக்கம் (தன்னிச்சை செயல்பாடு, அனிச்சை செயல்பாடு) என இருவகை கேந்திர செயல்பாட்டின் செயலக மையமாக விளங்கி வருவதற்கும் யாவற்றிற்கும் மேலாக அறிவு , புத்தி , சித்தம், என்ற மன தளத்தின் அதிபதியாக நுட்ப செயல்பாடுகளின் அதிக பட்ச தலைமையமாக விளங்கிடும் மூளை என்ற மிக நேர்த்தியான உறுப்பினை பாதுகாக்கும் பெட்டகமாக விளங்குவது எழும்பினால் ஆன மண்டை ஓடே ஆகும் . (தலைஎலும்புகள் 8 ).

மனிதன் மனிதனாக வாழவும் அதில் சிறந்ததோர் மாமனிதனாக வாழவும், அனுபவம் நிறைந்த ஆற்றல் மிகுந்த பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய மகான்கள் பலர் நிறைய வழி முறைகளை சொல்லியுள்ளனர்.அதன்படி வாழ்ந்த மனிதர்கள், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள், வாழப் போகும் மனிதர்கள் என முக்கால மக்களுக்கும் ஏற்ற வகையில் வாழ வழிகண்டுள்ளனர் மகான்கள். இவைதான் வாழ்க்கை நெறிமுறைகள் ஆகும்.இந்த நெறிமுறைகள் மத, இன, மொழிக்கு அப்பாற்பட்டு தத்துவ விளக்காக அமைந்திருக்கின்றன. இவை பெரிய மகான்கள் வாழ்ந்து அனுபவித்து புரிந்துகொண்ட உண்மைகளாக இருக்கின்றன.இந்த வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்கள் வாழ்க்கை நெறிமுறைகளை தவறவிட்டவர்கள். இவர்களின் வாழ்க்கை மனித வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு மிருக வாழ்க்கையாக மாறியுள்ளது.ஆனால் மேலான தத்தவங்களையும், சாஸ்திரங்களையும் படைத்து அதற்கு மேல் வாழ்ந்தவர்கள் தான் சித்தர்கள். இவர்கள் ஒரு மனிதன் செம்மையாக வாழ மனம், உடல், ஆன்மா இம்மூன்றும் சீரான நிலையில் இயங்கவேண்டும். அப்படி இயங்கினால்தான் மேற்சொன்ன வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியும், ஆத்மாவை உணர முடியும் என்கின்றனர் சித்தர்கள் (சித்தம் அடைந்தவர்கள்). மனதையும் உடலையும் வலுப்பெறச் செய்ய பிரபஞ்ச சக்தியை ஆட்கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளனர். பொதுவாக சூரியனை சுற்றி கோள்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கோள்களுக்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவற்றைத் தெளிவாக அறிந்து கொண்டு கோள்களின் இயக்கத்தினால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை பல சாஸ்திரங்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர். இந்த வகையில் வந்ததுதான் வான சாஸ்திரம். கோள்கள் அதனதன் நிலையிலிருந்து அனைத்து ஜீவராசிகளையும் இயக்குகிறது. ஆகையால் தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் மாறுபட்டு காணப்படுகிறான்.மனம், புத்தி, உடல் மாறுபடாமல் சீராக இருக்க பிரபஞ்ச சக்தி அவசியம் தேவையாகும். உடலுக்கு நல்ல எண்ணங்கள் நல்ல புத்தி கிடைக்க பிரபஞ்ச சக்தியை ஆக்க பலனாக மாற்றினால் தான் முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரபஞ்ச சக்தியைப் பெற தியானம், சரநிலை சுவாசம் மூலம் தான் முடியும் என்கின்றனர். சரநிலை சுவாசம் பற்றி கடந்த இதழ்களில் விரிவாக அறிந்துள்ளோம்.சரநிலை சுவாசத்தை நல்ல முறையில் கடைப்பிடித்தால் அது உடலுக்குத் தேவையான இரத்த ஓட்டத்தைக் கொடுத்து இதயத்தைப் பலப்படுத்தும்மேலும் நல்ல மன நிலையைக் கொடுத்து உடலுக்கு சக்தியை பெறச் செய்கிறது. இதனால் தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி மனிதன் சிறப்பாக வாழ வழி செய்கிறது. சரநிலை சுவாசத்தை பின்பற்றும் போது உடல் வலுப்பெற்று மனம் அமைதி அடைகிறது. தெளிவுற்ற மனமே நோயற்ற உடலைத் தரமுடியும். இந்நிலை சரசுவாசத்தினால் முடியும்.சரசுவாசத்தின் மூலம் பிரபஞ்ச சக்தி பெற்றவர்களால் தான் கோள்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும். கோள்களின் ஆதிக்கம் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. இதைத்தான் விதி என்கிறார்கள். மனிதன் பலமுயற்சி செய்தும் வெற்றிபெற முடியாத நிலைக்கு விதி என்கிறான். மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட சக்தியை விதி எனக் கூறுகிறான். ஆனால் சரசுவாசம் மூலம் கோள்களின் ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை மாற்றி பல நன்மைகளை பெற முடியும் என்கின்றனர் சித்தர்கள். சரசுவாசம் மூலம் பிரபஞ்ச சக்தியை அடைந்து கோள்களின் ஆற்றலான விதியை மாற்றலாம்.இந்த கோள்களின் ஆதிக்கத்தை பற்றி கவலைப்படாமல் அதன் போக்கையே மாற்றிக் காட்டியவர்கள் சித்தர்கள்.
“நாள் என்னசெய்யும் கோள் என்ன செய்யும்
நாதன் உள்ளிருக்கையிலே”
நாதன் என்பது சரநிலை சுவாசத்தின் மூலம் கிடைக்கும் பிரபஞ்ச சக்திதான் என்கின்றனர் சித்தர்கள்.

மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈசா யோக மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”.சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள்.தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவறை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது.இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான்.மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை.சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள்.சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு.எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம்.


தியானம்

தியானம் ஒரு கிளர்சியுட்டும் அனுபவம் .அதுவரை அறிந்திராத ஒன்று குறித்த அனுபவம் .மனித மனம் மேற் கொள்ளும் மகத்தான அனுபவம் .தியானத்தில் அப்படியே இருக்கிறிர்கள் எதையும் செய்யாமல் செயலில்லை ,சிந்தனை இல்லை ,உணர்ச்சி இல்லை ,அது ஒரு முழுமையான உவகை நிலை .நீங்கள் எதையும் செய்யாமல் இருக்கும் போது இந்த உவகை எங்கே இருந்து வந்தது ?அது எங்கும் இன்றி வரலாம் ,எங்கு இருந்தும் வரலாம் .அது வினை முதலற்றது .மகிழ்ச்சியால் நிரம்பி இருப்பது .தியானத்தின் எந்த நிலையிலும் நீங்கள் உடல்சார்ந்த விதத்தில்லோ மனம் சார்ந்த விதத்தில்லோ எதையும் செய்வது இல்லை .எவ்வித நிகழ்வும் இன்றி அனைத்து செய்கையும் நின்றுவிட நீங்கள் சும்மா இருக்கிறீர்கள்.அது நீங்கள் செய்யக் கூடியதும் அல்ல .பயிற்சி பெறக் கூடியதும் அல்ல .அதன் இயல்பை அறிந்துக் கொள்ளுகிறிர்கள்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இருக்கிற படியே இருங்கள் ஆழ்ந்து சிந்திப்பதும் ,ஒரு முனைப் படுத்துவதும் ,எண்ணமிடுவதும் ஒரு வேலையே ! நீங்கள் எதையும் செய்யாமல் முற்றிலும் ஓய்வாக ஒரே ஒரு கணம் உங்கள் மையத்தில் இருக்க முடிந்தால் அது தியானம் .அந்தத் திறமையை நீங்கள் பெற்ற பிறகு ,உங்களுக்கு விருப்பம் உள்ள வரை அதே நிலையில் தங்கி இருக்க முடியும் .நிறைவாக இருபத்தி நான்கு மணி நேரமமும் அதே நிலையில் உங்களால் இருக்க முடியும்.உங்களுடைய அமைதி குலையாமல் இருக்க முடிகிற போது, நீங்கள் நிதானமாய் செயல்படத் தொடங்கலாம் .உங்கள் இருப்பு நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகைகள் கவனமாக இருங்கள் ,அதுவே தியானத்தின் இரண்டாவது பகுதி .முதலில் ஓய்வாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் ,அடுத்து தரையை சுத்தம் செய்வது ,நிரில் குளிப்பது போன்ற சின்ன சின்ன செயல்களை உணர்வுடன் கவனமாக செய்யுங்கள். பிறகு சிக்கலான செயல்களை உங்களால் எளிதாக செய்ய இயலும்.ஆகவே தியானம் செயலுக்கு மாறானது அல்ல .அது வாழ்வில் இருந்து விலகி செல்வதும் ஆகாது. ஒரு புதிய வாழ்க்கைமுறையை அது உங்களுக்குப் போதிக்கிறது. நீங்கள் சுழல்காற்றின் மையமாக இருக்கிறிகள்.தியானத்தின் முழுமையான ரகசியமே நீங்கள் எல்லாவற்றையும் சாட்சியாக பார்பதுதான் .செய்கை தன்னுடைய தளத்தில் தொடர்கிறது ,எவ்வித பிரச்னையும் இல்லாமல் மரத்தை வெட்டுவது ,கிணற்றில் நீர் இறைப்பது என்று தொடர்கிறது ,நீங்கள் சிறியதும் பெரியதுமாய் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் .ஆனால் மையத்தில் இருந்து மட்டும் வழி தவறிவிட வேண்டாம் . உங்கள் விழிப்புணர்வும் ,கவனித்தலும் (விருப்பு ,வெறுபற்ற) சிதைந்து விடாமல் அப்படியே இருக்க வேண்டும்.இருக்கும் இடத்தில் இருப்பது.நாம் நாமாக இருப்பது.முழுமையாக இருப்பது.மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.மனதைச் சுத்தப்படுத்துவது.இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.ஆனால் யதார்த்தத்தில் நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்லை.இதுவே நாம் அறியாதது.தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.தியானம் என்பது மனம் கடந்து செல்வது.மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.

நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது. அமைதி நம்மில் நிலவுவதற்கான ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும். எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது.கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது.நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பலஉள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றைஅடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது. டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல், டைனமிக் தியானம், நம் கடந்த காலத்தை, நாம் அடக்கிய உணர்ச்சிகளை, நாம் அடக்கிய உணர்வுகளை வெடிக்கச் செய்து படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால்; பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும். இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது. இதன் பின் மனதை அமைதியாக்குவது. நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்து கொண்டே நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான். உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது. ஆனால்; உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால் மனதையும் வழிநடத்தலாம். மனம் அமைதி ஆக இருக்குமாயின் அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை. ஆனால்; நம்பிக்கையுடன் இதயத்தை அணுகினால் இதையும் அமைதியாக்குவது சாத்தியம். இதன்பின் நம் மையத்திற்கு அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால் நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம். இங்கு அமைதியாக இருக்கலாம். இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும் பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.கண்ணை மூடியவாறே மூக்கின் நுனியைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள். இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது. இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார். புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை. உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை! அனைத்தும் அறிந்த நிலை.எதையும் துறக்காமல் உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல் நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய தினந்தோறும் தியானம் செய்வோம்.

மனித உடலில் பிரபஞ்ச சக்திகள்

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாத பித்த கபம் எவ்வாறு மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்பு ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது.
அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே
என்று சித்தர் பாடுகிறார். பொதுவாக எலும்புக்கூடு, நரம்பு, தசை, தமனி, முதலானவைகள் தான் மனிதன் என்று சொல்வது அறியாமை என்கின்றனர் சித்தர்கள். அண்டத்தில் அதாவது பிரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்கிறார். பிண்டம் என்றால் உடம்பைக் குறிக்கும்.பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது.சுக்கிலமும் சுரோனிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு மூன்றும் சேர்ந்து மண் உருவு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என நிலைப்படுகின்றது.இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள் தாவரப் பொருட்கள் அனைத்தும் சங்கமமாகின்றது. மனித உடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.மேலும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களோடு தொடர்புடைய தாகவும், இந்த தத்துவங்களின் அடிப்படையில்தான் மனித உயிர் அனைத்து சக்திகளையும் அடக்கி ஆளும் தன்மை கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.சூரிய சக்தியானது மனிதனின் தமரகம் என்னும் இதயத்துடன் தொடர்புடையது என்றும், மூளை நரம்புகள் அனைத்தும் சந்திரனோடு தொடர்பு உடையவை என்றும், பித்தப்பை இரத்தம், செவ்வாயோடு தொடர்பு உடையவை என்றும் உடலை பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.
சூரிய சக்தி - தமரகம் (இதயம்)
சந்திர சக்தி - மூளை நரம்புகள்
செவ்வாய் - பித்தப்பை, இரத்தம் (செந்நீர்)
சுக்கிரன் - இடுப்புப் பகுதி
புதன் - நுரையீரல்
குரு (வியாழன்) - கல்லீரல்
சனி - மண்ணீரல்
ஆகவே மனித உடலானது கிரகங்கள் (கோள்கள்) நட்சத்திரங்களின் ஆதிக்கத்தைப் பொறுத்து மாறுபாடு அடைகிறது என்பது புலனாகிறது.பிரபஞ்ச சக்தியை அடைந்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் இந்த கோள்களின் ஆதிக்கத்தை மாற்றியும், நட்சத்திரங்களின் தன்மைகளை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவர்கள். சில சமயங்களில் இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி இயக்குபவர்களும் இவர்களே.பிரபஞ்சத்தில் மனிதனே முதன்மையானவ னாகவும் அவன் தன்னைத்தானே அறிந்து கொள்பவனாகவும் இருக்கிறான். இதையே ஒளவையார் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று பாடினார்.இதனால்தான் மனிதன் ஐம்பெரும் பூதங்களை அடக்கி ஆளும் சக்தியைப் பெற்று இயற்கையின் போக்கை இயக்கவும், மாற்றவும் வல்லவன் ஆகிறான் என்கின்றனர்.இந்த பிரபஞ்ச சக்தியை அடைவது பற்றி நாம் வர்மத்தின் மர்மங்கள் என்ற தொடரில் திலர்த கால ஒளியின் மூலம் இந்த சக்தியை அடைவது பற்றி விரிவாக அறிந்துகொண்டிருப்பீர்கள்.இதுபோல் மனித உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள் ஆதாரங்களுடன் தொடர்பு உள்ளது போல் ஐம்பூதங்களின் ஆதிக்கம் மனித சக்தியிலும் நிறைந்துள்ளது. ஆகையால் மனிதன் ஐம்பூதங்களை அடக்கியாள முடிகிறது. இதைத்தான் சித்தர்கள் பல நூல்களிலும், சோதிட சாஸ்திரங்களிலும் மனிதனுக்கு கோள்களின் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக கணித்துக் கூறியுள்ளனர்.பஞ்ச பூதங்கள் வாத பித்த கபமாக நிறைந்து அதனதன் நிலைப்பாட்டுடன் உள்ளது. பிரபஞ்சத்தில் கோள்களின் ஆதிக்கம் மாறும்போது உடலிலும் வாத பித்த கப மாறுபாடு ஏற்படுகிறது. இதனால் மனிதன் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.இப்படிப்பட்ட கோள்களின் ஆதிக்கத்தைத் தெரிந்துகொண்டு அதன்மூலம் மனிதன் நோய் நொடியின்றி தன்னைக் காத்துக்கொள்ளவே வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் போன்றவற்றை சித்தர்கள் உருவாக்கினர்.

மனித உடலானது பிரபஞ்சத்தில் ஒரு பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த ஐம்பெரும் பூதங்கள் நம் உடலில் செயல்படுகிறது.ஐம்பூதங்களின் தன்மையினால் உருவான உடலானது அண்டத்தின் செயல்பாடுகளால்தான் இயக்கப் படுகிறது.இத்தகைய உடலை இயக்கும் உயிர்ஸ்தானம் எங்குள்ளது என்பதை தியானம் மூலமே அறிந்துகொள்ள முடியும்.சித்தர்கள் தங்களின் தவப்பயனால், உடலின் சாராம்சங்களை அறிந்து கொண்டு மனதை செம்மைப்படுத்தி ஒருநிலைப்படுத்தும் போது உடலில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒரே நேர்க்கோட்டில் வரும்போது திலர்த காலம் என அழைக்கப்படும் சுழிமுனையில் ஒளியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில்தான் உடலில் பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளுக்கும், கோள்களின் ஆதிக்கத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர் இதைத்தான் சித்தர்கள் அகாரம் உகாரம் மகாரம் என்ற சொல்லின் வடிவம்தான் ‘ஓம்’ என்று அழைத்தனர். இந்த ‘ஓம்’ என்ற சொல் எந்த ஒரு மதத்தினருக்கும் சொந்தமானதல்ல. அனைவருக்கும் பொதுவானது. மனிதனின் முகம் ஓம் என்ற வடிவில் அமைந்துள்ளது என சித்தர்கள் கூறுகின்றனர்.ஆகையால்தான் தமிழ்மொழியில் ‘அ’ என்ற எழுத்தை முதல் உயிரெழுத்தாக கொண்டுள்ளது.திருவள்ளுவர் தன்னுடைய திருக் குறளில்
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு
என்று பாடியுள்ளார்.சிலர் திருவள்ளுவர் இறைவணக்கம் பாடவில்லை என்று கூறுவர். ஆனால் அகர என்ற சொல்லே இறைவனை வணங்கும் முதல் சொல்லாகும். மனித உடலின் பிரபஞ்சத்தை நன்கு அறிந்து அதனையே முதல் குறளில் முதல் வரியாகவும் இறைவணக்க பாடலாகவும் பாடியுள்ளார்.
அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்த்திடவே ஆகும் முக்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப்பார்த்து
குறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன்
முக்கோண நிலையதாமே சித்தர் பாடல்
“பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்”
இந்த ஓங்கார சக்திதான் உடலை இயக்கும் மாபெரும் சக்தி என்கின்றனர் சித்தர்கள். இத்தகைய சக்தியை அடைந்துவிட்டால் மனம் என்னும் அடங்காத குதிரையை அடக்கி அதன்மேல் சவாரி செய்வதுபோல் கம்பீரம் கிடைக்கும் என்கின்றனர்.
மேலும் அவர்கள்
அம் என்று இரு
இம் என்று இரு
உம் என்று இரு
என்று கூறுகின்றனர். பிராண வாயுவின் செயல்பாடுகள் இந்த வடிவில்தான் செயல்படுகின்றது. தவக்கோலத்தில் பிராண வாயுவை அம், இம், உம் என்ற நிலையில் செயல்படுத்தினால் மூலாதாரத்தில் இருந்து எழும்பும் (அதாவது குண்டலினி) ஓங்கார சக்தி மேல் நோக்கி எழுந்து தனஞ்செயன் வாயு அடங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து சுழிமுனையை அதாவது திலர்த காலத்தை அடைகின்றது. இதனால்தான் சித்தர்கள் அண்ட சாரத்தினை தங்களின் ஆற்றலினால் மாற்றி அமைக்க முடிந்தது.சாதாரணமாக மனித உடலில் கிலேசம் என்ற நீர் உற்பத்தியாகிறது. இந்த கிலேச நீரை ஒருநிலைப் படுத்தும்போது உருவாகும் நீரைத்தான் அமிர்த கலை நீர் என்று அழைக்கின்றனர். இந்த கிலேச நீர் என்பது ஒன்றை பார்த்தவுடன், கேட்டவுடன் அல்லது உணர்ந்தவுடன் உடலில் ஊறும் ஒரு அபரிமிதமான நீராகும். இந்த நீர் எண்ணங்களுக்கு ஏற்ப உற்பத்தியாகிறது... மாறுபடுகிறது.உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அல்லது ஒரு பெண் ஒரு ஆணைப் பார்க்கும்போது உடலில் ஒருவகையான மனக் கிளர்ச்சி உண்டாகும். அப்போது சுரக்கும் நீர் மனக் கிலேச நீராகும். அதுபோல் தொடும்போது, உணர்ச்சிவசப்படும்போது, இனிமையான பாடலைக் கேட்கும்போது பலவிதமான எண்ணங்களை வெளிப்படுத்தும் போது உடலில் மாற்றம் ஏற்பட்டு மனநிலை மாறி கிலேச நீர் உற்பத்தியாகிறது. இந்த கிலேச நீர்தான் அனைத்து செயல்பாட்டினையும் தூண்டும் சக்தியாக விளங்குகிறது.மூலாதாரத்திலிருந்து உயிர் சக்தி சீற்றமாகி மேல் எழும்பி ஆதாரங்களைத் தூண்டி தனஞ்செயனை தொடும்போது கிலேசன் என்னும் அமிர்த நீர் உற்பத்தியாகிறது. இதைத்தான் சிவனின் தலையிலிருந்து உற்பத்தியாகும் கங்கை நீராக புராணங்களில் சித்தரிக்கின்றனர்.ஒருவரை பார்க்கும்போதும், பேசத் தூண்டும் போதும் கிலேச நீர் அபரிமிதமாக தோன்றி எண்ணங்களை மேலோங்கச் செய்கிறது.அதிக மகிழ்ச்சியடையும்போது ஆனந்தக் கண்ணீராக வெளிவருவதற்கும், துக்கமடையும்போது கண்ணீராக வெளிவருவதற்கும் இந்த கிலேச நீர்தான் காரணம். இந்த கிலேச நீர் வாத, பித்த கப உடல்கூறுகளுக்குத் தகுந்தவாறு எவ்வாறு மாறுகிறது, அப்படி மாறும்போது உடலில் அதிக மாற்றம் உருவாகிறது.

ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம். மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.
நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்
நேரான தேயுவோடு வாயுமாகும்
அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்
அரிதான பிருதிவியு மண்ணு மாகும்
தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு
தாக்கான வாயுவது காற்றுமாகும்
இகழ்ந்தவா காயமது சத்தமாகும்
ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே
யூகி வைத்திய சிந்தாமணி
மண்ணின் கூறுகள் மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.
நீரின் கூறு (புனலின் கூறு)நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நெருப்பின் கூறு உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.
வளியின் (காற்று) கூறுஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
விண்ணின் (ஆகாயம்) கூறுஇன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மண் (பிருத்திவி)
திருவாணைக்கால் நீர்
திருவண்ணாமலை நெருப்பு
காளஹஸ்தி காற்று
சிதம்பரம் ஆகாயம்.
பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment