இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.
இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்......
இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..
புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்...
வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்...
கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்.
தேள் கடி மருந்துகள்:-
எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.
கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.
கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.
சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.
கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.
பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.
குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.
காய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...
"மருக்கலம் வேரரைத்து ஆவெண்ணெயில்கொ
ளப்பிகையில் தடவு மழுவேடுக்கலாமே பாரு"
"மருக்கலம் வேரரைத்து ஆவெண்ணெயில்கொ
ளப்பிகையில் தடவு மழுவேடுக்கலாமே பாரு"
மருக்கலம் வேரைத் தண்ணீர் விட்டுக் கெட்டியாக அரைத்து எடுத்து, பின்னர் பசுவின் வெண்ணெய்யில் குழைத்து கையில் பூசிக் கொண்டு காய்ச்சிய இரும்பைக் கையால் தூக்கினால் சுடாது என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment