Saturday, December 28, 2019

பெண்கள் விரைவாக பூப்படைவதற்கான காரணங்கள்.


பெண்கள் விரைவாக பூப்படைவதற்கான காரணங்கள்.
நமக்கு முந்தைய தலைமுறை வரை பெண்கள் 15 வயதிற்கு மேல் தான் பூப்படைந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் 8 வயது முதலே பூப்படைகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் அவற்றில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்
சீரற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை:
·   பால் மற்றும் பால் பொருட்கள்: சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் சிறுவயதில் அதிகம் பால் மட்டும் குடிக்கும் குழந்தைகள் சீக்கிரமாக பூப்பெய்துகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. பால் மட்டுமல்ல, பால்பவுடர் கலந்து செய்யப்படும் சாக்லேட்டுகளும் ஒரு முக்கிய காரணமாகும்.

·  மாட்டுப்பாலினால் ஏற்படும் தீமைகள்: மாடுகள் அதிகம் பால் தருவதற்கு RCBGH (Recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் சேர்க்கப்படுகிறது. இந்த ஹார்மோன் (recombinant bovine growth hormone) பாலிலும், தயிரிலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லேட் மற்றும் பிற இனிப்புகளிலும் அதிகம் இருப்பதும் பெண் குழந்தைகள் விரைவில் பூப்பெய்துகின்றனர்.


 பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தபட்டு டின்களில் அடைக்கபட்ட விலங்கு இறைச்சிகள் மற்றும் ஏனைய உணவுப்பொருட்களில் பல்வேறு வேதிப்பொருட்களைச் சேர்ப்பர், இவை நமது உடலில் உள்ள செக்ஸ் ஹார்மோன்களின் சமனிலையைப் பாதிக்கிறது. இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் பெண்குழந்தைகள் விரைவில் பூப்படையக் காரணமாக அமைகிறது.

ஓட்ஸ் உணவுகள்: ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது. ஐஸோஃப்லாவின்ஸ், லிக்னைன் சத்துக்கள் அதிகமுள்ள எந்த ஒரு தாவரமும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் உடலுக்கு தரக் கூடியவை அந்த வரிசையில் ஓட்ஸ் உள்ளது.
      பிராய்லர் கோழி : இன்றைய காலத்தில் அனைவரின் பிரியமான உணவாக பிராய்லர் கோழிக்கறி உள்ளது, ப்ராய்லர் கோழிகள் வளர்ப்பிற்கு பயன்படும் உணவுகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8 வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கான காரணங்களில் ஒன்றகிறது.

·      பெண்குழந்தைகள் சிறிய வயதில் பூப்பெய்துவதில் முக்கிய பங்கு நமது உணவுப் பழக்க வழக்கமாக இருந்தாலும் இவை யெல்லாம் தாண்டி இந்த விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பெரிய விடயம் ஒளிந்து கொண்டு இருக்கிறது.  நாம் நமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பற்றாக்குறையல் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிப்பதிலிருந்தே இது தொடங்க்குகின்றது. பிறந்த குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் ஃபீடிங் பாட்டிலகள் மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ப்ளாஷ்டிக் தண்ணீர் குடுவைகள், துரித உணவுகள் பிளாஸ்டிக்குகளில் பாலி கார்பனேட் பிளாஸ்டிக்குகள் தான் பயன்படுத்தப்படுகிறது.
·
   இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் குகளில் இருக்கும் பிஸ்ஃபீனால்கி என்னும் மூலக்கூறு ஃபீடிங் பாட்டில்கள் மூலம் குழந்தைகளின் உடலுக்குள் ஊடுருவி ஈஸ்ட்ரோஜன் என்னும் பெண் ஹார்மோன் சுரப்பை அதிகமாக்குகிறது. இதே மூலக்கூறு ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. வழக்கத்திற்கு மாறாக ஈஸ்டரஜன் சுரப்பு பெண் குழந்தைகள் சிறிய வயதில் பூப்படைவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

·        உடற்பருமன்: சமீபத்திய ஆய்வுகள் உடற்பருமனுடன் இருக்கும் குழந்தைகள் விரைவில் பூப்படைகின்றனர் என கூறுகிறது. இது போன்ற குழந்தைகள் விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவது மட்டுமல்லாமல், சரியாக மாத மாதம் மறுசுழற்சி அடைவதில்லை எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும், சீக்கிரம் பூப்பெய்துவதற்கும் அதிகப்படியான இடையே முக்கியக்காரணமாக அமைகிறது.


· தொலைகாட்சி, சினிமா போன்ற துறைகளின் பங்கு. தொலைக்காட்சி அதிக நேரம் பார்ப்தால் தூக்கம் பாதிக்கப்படுகிறது, இது மட்டுமல்லாமல் தொலக்காட்சிகள், சினிமா மற்றும் வலைதளங்களில் பாலுணர்வைத்தூண்டும் வகையில் ஒளிபரப்படும் நிகழ்ச்சிகள் மனதில் இச்சையை உண்டுபண்ணி ஹார்மோன் சுரப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது இத்தாலியில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.

· மன அழுத்தம் - எடுத்துக்காட்டாக பெற்றோர்களிடையே பிரச்சனை இருந்தால். குறிப்பாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்தால் குழந்தைகள் விரைவாக பூப்படைகின்றனர். பெற்றோர்கள் பிரச்சனை குழந்தைகளின் மனநலத்தை பாதித்து மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன்கள் சுரப்பில் பிரச்சனைகள் ஏற்பட்டு விரைவில் பூப்படைகின்றனர்.

நன்றி,
வாழ்க வளத்துடன்

மரு.மு.யோகானந்த் MD., MEM., Msc (Varmam)., MSCP., MITBCCT (UK),        சத்யா கிளினிக், 
51/2, செந்தூர்புரம் முக்கிய சாலை,
காட்டுப்பாக்கம்,  சென்னை - 600 056.
அலைபேசி எண் : +919843118402.
வலைதளம்: http://sathyapolyclinic.wixsite.com/ayush


No comments:

Post a Comment