Wednesday, January 19, 2022

முற்காலப் பாண்டியர்கள்

 


முற்காலப் பாண்டியர்கள்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதிபெரும்பெயர் வழுதி

வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர்.

பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர். 24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது.

மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத், தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான். அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது.[1] காவிரியாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

வடிம்பு, சொல்விளக்கம்[தொகு]

வடிம்பு என்பது உள்ளங்கால், உள்ளங்கை முதலானவற்றின் விளிம்பு. கை, கால் வடிம்புகளில் (விளிம்புகளில்) குவளைப் பூக்களை நிறுத்தி, மகளிர் பொய்தல் விளையாடினர். நெடுந்தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி மணல் கமழ் மனைதொறும் பொய்தல் அயர மதுரைரைக்காஞ்சி 588 கால் வடிம்பால் (விளிம்பால்) குதிரைகளைத் தட்டி ஓட்டிச் சவாரி செய்தனர். மா உடற்றிய வடிம்பு பதிற்றுப்பத்து 70, கடுமா கடைஇய விடுபரி வடிம்பு புறம் 378 எருமைக் கடாவைக் காளி கால் வடிம்பால் மிதித்தாள். ஏற்றருமை நெஞ்சம் வடிம்பின் இடந்தாள் கலித்தொகை 103-44 என வரும் சொல்லாட்சிகளால் வடிம்பு என்னும் சொல்லின் பொருளை உணரலாம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. முன்னீர் விழவின் நெடியோன்
    நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புறம்-9)}}


நிலந்தரு திருவிற் பாண்டியன்

‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து’ தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. [1]

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘நிலம் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்’ [2] எனக் குறிப்பிடப்படுகிறான். இந்த நெடியோன் இரு பெரு வேந்தரும், வேளிரும் சாயும்படி போரிட்டு நிலம் தந்தவன் [3]

‘மண் பல தந்த திரு வீழ் பசும்பூண் பாண்டியன்’ என்பவனின் படைத்தலைவனாக விளங்கியவன் நாலை கிழவன் நாகன் [4]

இவற்றைக் காலக் கண்ணில் நோக்கும்போது தெளிவு ஒன்று பிறக்கும்.

  • நிலம் தந்த பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது (கி. மு. நாலாம் நூற்றாண்டு அளவிலோ அதற்கு முன்னோ)
  • நிலம் தந்த நெடியோன் சங்க காலத்தவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு உதவியவன். நாகன் இவனது படைத்தலைவன். பசும்பூண் பாண்டியன் எனப் போற்றப்பட்டவன்.

என மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைச்சங்க காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.

அடிக்குறிப்பு[தொகு]

  1.  தொல்காப்பியப் பாயிரம்
  2.  உம்பல் = யானை - மதுரைக்காஞ்சி 60-61
  3.  மதுரைக்காஞ்சி 55-59
  4.  புறநானூறு 179

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி


குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது. மூத்த குடும்பன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.[1] ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேள்விக்குடிச் செப்பேட்டில்.

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்

இவனைப் பற்றிப் புறநானூற்றில் "முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64)

காரிக்கிழார் பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்

நெட்டிமையார் இவனைப் பற்றிப் பாடுகையில்

மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு "விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது.

நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார்நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.

இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:

பாண்டியன் பல்யாகசாலை முதுமுடுமிப் பெருவழுதி[தொகு]

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவர்.

காலநிரல்[தொகு]

இவனது வரலாற்றைத் திரட்டிப் பார்க்கும்போது காலநிரல் ஒன்று தெளிவாகிறது.

  1. பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி
  2. நிலந்தரு திருவின் நெடியோன்
  3. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

வழுதி 5 பேர்[தொகு]

வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர்.
அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை.

  1. வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3
  2. வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21
  3. வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,
  4. வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,
  5. வழுதி - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.

வழுதிக்கு அறிவுரை[தொகு]

‘தண்டா ஈகைத் தகைமாண் வழுதி’ எனப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போற்றப்படுகிறார். இவரது வெற்றிகளைப் பாராட்டிய காரிகிழார் இவருக்குக் கூறும் அறிவுரைகள் எண்ணத்தக்கன.

  • ஞமன் என்னும் யமனின் தெரிகோல் போல் ஒருதிறம் சாயாமல் நடுவுநிலைமையைக் கைக்கொள்க.
  • நன்கலம் பரிசில் மாக்கட்கு வரிசையுடன் நல்குக.
  • சிவன் திருவிழாக் காலத்தில் தெருவில் உலா வரும்போது உன் குடை பணியட்டும்.
  • நான்மறை முனிவர் கையேந்தும்போது நீ தலை வணங்குக.
  • பகைவர் நாட்டைச் சுடும் புகையில் நின் மாலை வாடுக.
  • மகளிர் கண்ணீர் வடிக்கும்போது உன் சினம் ஓடி மறைக [2]

போரில் அறத்தாறு கடைப்பிடித்தவன்[தொகு]

போரில் அறத்தாற்றைக் கடைப்பிடித்தவன் இந்தப் பாண்டியன்
'போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை, ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள்' என முன்கூட்டியே அறிவித்தல் போர்அறம்.
இப்படிப்பட்ட அறநெறியாளன், கடலில் விழாக் கொண்டாடிய நெடியோன் நாட்டில் பாயும் பஃறுளி ஆற்று மணலைக்காட்டிலும் பல்லாண்டு வாழ்க.[3]

வெற்றித்தூணும் வேள்வித்தூணும் நாட்டியவன்[தொகு]

நின்னோடு போரிட்டுத் தோற்றவர் பலரா? (அப்போது நீ நாட்டிய வெற்றித்தூண் பலவா?)
அல்லது நால்வேத நெறியில் நெய் ஊற்றிச் செய்த வேள்விக்காக நட்ட தூண் பலவா?
யா பல என வினவி அவனது ஆட்சியைப் படம்பிடிக்கிறார்.[4]

போர்க்களத்திலும் கொடை வழங்குபவன்[தொகு]

குடுமிக்கோமான் போர்களத்தில் இருக்கும்போதும் விறலியர்க்குக் கொடை வழங்கும் பண்புள்ளவன்.[5]

புலவர்களைப் புணர்கூட்டு என்னும் பெயரில் கூட்டிச் சங்கம் நிறுவியவன்.[தொகு]

நிலந்தரு திருவின் நெடியோன் என்னும் பாண்டியன் தொல்லாணை நல்லாசிரியர்களைக் கூட்டி புலவர்களின் புணர்கூட்டு(சங்கம்) என்னும் நல்வேள்வி செய்தான். இதில் கூட்டப்பட்ட நல்லாசிரியர்கள் பல்சாலை முதுகுடுமியால் முன்பே ஒருங்கிணையக் கூட்டப்பட்டவர்கள்.[6]

அடிக்குறிப்பு[தொகு]

  1.  பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  2.  காரிகிழார் – புறம் 6
  3.  நெட்டிமையார் – புறம் 9
  4.  நெட்டிமையார் புறம் 15
  5.  நெடும்பல்லியத்தனார் – புறம் 64
  6.  பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போலத் (தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விளங்கினானாம். மாங்குடி மருதனார் - மதுரைக்காஞ்சி 759-765

வெளிப்பார்வை[தொகு]



பெரும்பெயர் வழுதி

பெரும்பெயர் வழுதி என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் புறநானூற்றில் இவனைப் பாடியுள்ளார்.[1] ஈகைக்கடன் பூண்ட கவுரியர் வழிவந்தவன் என இவன் குறிப்பிடப்படுகிறான். புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு இந்தப் பாண்டியனைப் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி எனக் குறிப்பிடுகிறது.

மருந்தில் கூற்றம் என்னும் ஊரை இவன் கைப்பற்றினான். அப்போது அவன் யானையின் கழுத்தில் மணி கோத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மேல் இருந்துகொண்டு மருந்தில் கூற்றத்துக் கதவுகளை யானைக்கோட்டால் உடைத்து முன்னேறி வென்றானாம். [2]

இவனது மனைவியின் கற்பும், பதுக்கையுடன் கூடிய இவனது கோட்டை மதிலின் சிறப்பும் பாடலில் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

புலவர் இவனுக்கு இரண்டு அறிவுரைகள் கூறுகிறார்.

  • ஆட்சியை இழக்க நேர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே.
  • நாடி வரும் புலவர்களின் குறிப்பறிந்து அவர்களின் வறுமையைப் போக்குவது உன் கடமை.

அடிக்குறிப்பு[தொகு]

  1.  "கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!"-புறநானூறு: 3
  2.  பொன் ஓடைப் புகர் அணி நுதல்
    துன் அருந்திறல் கமழ் கடாஅத்து
    எயிறு படையாக எயில் கதவு இடாஅக்
    கயிறு பிணி கொண்ட கவிழ் மணி மருங்கின்
    பெருங்கை யானை இரும்பிடர்த் தலை இருந்து
    மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
    கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி (புறநானூறு 3)

வெளிப்பார்வை[தொகு]

வழுதி குணம் வெற்றி வழுதிக்கு அறிவுரை - இரும்பிடர்த்தலையார்

No comments:

Post a Comment