Showing posts with label வர்மம். Show all posts
Showing posts with label வர்மம். Show all posts

Sunday, March 9, 2014

சீறும்கொல்லி வர்மம்

2. சீறும்கொல்லி வர்மம்

வேறு பெயர்கள் :

      1. சீறும் கொல்லி வர்மம் (வர்ம பீரங்கி-100)
      2. சிடை வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

பெயர்க்காரணம் :
இந்த வர்மத்தில் அடிபட்டால்நோயாளி தலையை அங்குமிங்கும் உருட்டுவான். மேலும் வாயில் நுரை தள்ளும்இது காண்பதற்கு சீறுவதைப் போலத் தோன்றும். இதனால் இவ்வர்மத்திற்கு சீறும்கொல்லிஎனப் பெயர் வந்திருக்கலாம்.

இடம் :
பின் தலைப் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :
1.   கேளப்பா சிரசில் நடு கொண்டக் கொல்லி
      கீர்த்தி பெற ஒட்டயின் கீழ் சீறும் கொல்லி
      நாளப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்’    (வ.ஒ.மு. சாரி-1500)

2.   ஆமென்ற சிரசு நடு கொண்டைக் கொல்லி
            அதனொன்று ஒட்டையின் கீழ் சீறும் கொல்லி
      ஓமென்ற அங்குலம் நால் கீழ் பிடரி வர்மம்’      (வர்ம பீரங்கி-100)

3.   தானான தலை நடுவில் கொண்டைக் கொல்லி
            சாண் ஒட்டை அதற்குக் கீழ் சீறுங்கொல்லி
      ஊனான இதற்கு நாலங்குலத்தின் கீழ்
            உற்றதொரு பிடரி வர்மம் ஆகும்பாரு’       (வர்ம கண்ணாடி500)

4.   தானான தலை நடுவில் கொண்டைக் கொல்லி
            சாணொட்டை அதன் கீழே சீறுங்கொல்லி
      ஊனான இதற்கு நாலங்குலத்தின் கீழே
            உற்றதொரு பிடரிவர்மமாகும் பாரு’    (வர்ம திறவுகோல்)

5.   சேரவே தலையில் மத்தி செகித்ததோற் கொண்டைக்கொல்லி
      பூரவே சாணொட்டைக்குள் புகன்றிடும் சீறும்கொல்லி
      தாரவே நால்விரலுக்கு தாழவே பிடரி வர்மம்’ (வ.லா. சூத்திரம்-300)

6.   கொண்டைக் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு விரலுக்குக்
      கீழ் சீறுங்கொல்லி இதற்கு நாலு விரலுக்குக் கீழ் பிடரிவர்மம்
      (வர்ம விரலளவு நூல்)

7.   கொண்டைக் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு
      விரலளவுக்குக் கீழே பின்புறமாக சீறும்கொல்லி வர்மம்....
      (வர்ம விளக்கம்)

8.   உச்சியிலுள்ள துடி காலத்திலிருந்து முன் பக்கம்
      கொம்பேறிக் காலமும் பின்பக்கம் சீறும் கொல்லி வர்மமும்
      சம அளவு தூரத்தில் அமைந்துள்ளது’.       (வர்மாணி நாலுமாத்திரை)

9.   கண்டத்தின் மேல் திலர்த காலத்திலிருந்து சீறும்கொல்லி
      உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) இரண்டாக
      மடக்கி (16 விரலளவு) திலர்த காலத்திலிருந்து (பக்கவாட்டில்)
      அளந்தால் சீறும் கொல்லி அறியலாம்’        (வர்ம நூலளவு நூல்)

10.  செய்யவே ஒட்டையின் கீழ் உச்சி தன்னில்
            திடமான சிடைவர்மம் தன்னைக்கேளு’ (வ.ஞா.ஒ.மு.ச.சூ-2200)

விளக்கம் :
இவ்வர்மம் கொண்டைக் கொல்லி (துடி காலம்) வர்மத்துக்கு ஓர் ஒட்டைக்கு அல்லது ஒரு சாணுக்கு (12 விரலளவு) பின்புறமாக அமைந்துள்ளது. 

(பொதுவாக ஒட்டை’ என்பது 10 விரலளவு என்ற கணக்கில் கொண்டால்கூட தலை போன்ற வளைந்த பகுதிகளில் ஒட்டை அளவை அளக்கும் போது விரிக்கப்பட்ட இரு விரல் நுனிகளுக்கிடைப்பட்ட நேரடி நீளத்தை (10.வி.அ.) கணக்கிட்டாமல் மண்டையின் வளைவை மனதில் கொண்டு விரல்களின் ஓரமாகவே அளக்க வேண்டும். இப்படி அளக்கும் போது 12 வி.அ. இருக்கும்.) மேலும் இவ்வர்மம் பிடரி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு மேலாக அமைந்துள்ளது. திலர்த வர்மத்திலிருந்து 16 விரலளவுக்கு பக்கவாட்டில் உள்ளது. இது ஒற்றை வர்மமாகும்.

வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம்-2200’ என்ற நூல் சிடைவர்மம் என்ற பெயரில் ஒரு வர்மத்தைக் குறிப்பிடுகிறது. இது உச்சியிலிருந்து ஒர் ஒட்டைக்கு கீழே (பின்னால்) உள்ளது என்று குறிப்பிடுகிறது. இவ்வர்மத்தில் அடிப்பட்டால் தலை உருட்டல்வாயில் நுரைதள்ளல் போன்ற குறிகுணங்கள் ஏற்படும் இவ்வர்மத்தின் இருப்பிடம் மற்றும் குறி குணங்கள் சீறும் கொல்லி வர்மத்தோடு ஒத்துப் போவதால் இரண்டும் ஒரு வர்மமே என்பது தெளிவாகிறது.

உடற்கூறு :The Lambda of the skull. The point of intersection of sagittal and Lambdoid Sutures இவ்வர்மம் இரு Parietalஎன்புகளும். பின்புறமுள்ள ஒரு Occipital என்பு சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. தலையில் அல்லது ஒரு மண்டை ஓட்டின் பின் பகுதியைத் தடவிப் பார்த்தால் இவ்விடம் சற்றே மேடாகத் தெரியும்.

மாத்திரை :
ஏழு விரல் அகலம் வாங்கிஅடிக்கவோ குத்தவோ செய்தால் உடன் மயங்கும்.

குறிகுணம் :

சீறும் கொல்லி (2)

      கொள்ளவே இன்னுமொன்று சீறும் கொல்லி
            கொண்டவுடன் தலை உருட்டும் குறி கேடாக
      தள்ளவே நுரை தள்ளும் குறுக்கு கூனும்
            தாக்கும் பார் நாக்கையுமே சதிவதாக      (அடிவர்ம சூட்சம்)

வர்மலாட சூத்திரம்-300 :தலை உருட்டும். (பிரதான குறிகுணம்)

வர்ம பீரங்கி-100 :தலை உருட்டும். வாய் நுரை காணும். குறுக்கு கூனும்நாக்கை உள் வலிக்கும்.

வர்ம சாரி-205 :கொண்டவுடன் தலை உருட்டும். வாயில் நுரை வரும். குறுக்கு கூனும். நாவை சப்பும்.

வர்ம விளக்கம் : ஓயாமல் தும்மும்வியர்க்கும்மூக்கில் நுரை வரும். இரத்தமும் வரும்.

வர்ம வில்லு விசை : உதடு கோணும். வாயில் நுரை வரும். தலை சுற்றும். இருமல்தாகம்பைத்தியம் (கிரிகை) இவை வரும்.
வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200 :சிடைவர்மம் கொண்டால் தலை உருட்டும். நுரை தள்ளும். வாய் நீரூறி உள் வாங்கும்.

அவதி :

வர்ம சாரி - 205 :நாழிகை 12

வ.ஞா.ஓ.மு. சரசூத்திரம்-2200 :நாழிகை 10-க்குள் அடங்கல் செய்யவும்.

மருத்துவம் :

இளக்குமுறை 1 :

      தலை-கழுத்து வர்மங்களுக்கான சிறப்பு வர்ம இளக்குமுறை.

மருந்து : (வர்ம வில்லுவிசை)

எண்ணெய் : வெங்காயம்சிவதைமூசாம்பரம்பஞ்சவன் பழுக்காய்சாதிக்காய்பற்படாகம்சீரகம்நாங்கணம்கோரோசனை வகைக்கு கிராம் வீதம்,சித்திரமூலம்இசங்குஆடாதோடைஇஞ்சி வகைக்கு 20 கிராம்சதைத்து தேங்காய் எண்ணெய் 750 மில்லியில் காய்ச்சி முதிர் மெழுகு பதத்தில் எடுத்து  தலையில் தேய்க்கவும்,

தளம் : உழிஞ்ஞை சாற்றில் பஞ்சாரை (சீனி) அரைத்து தலையில் தளம் வைக்கவும்.

இளக்குமுறை 2 : (வர்ம விளக்கம்)
நாடியை ஏந்தி குலுக்கிவிட்டுகுரல்வளையிலிருந்து மேல் நோக்கி தலையின் இருபுறமும் தடவி விடவும். இளகும். இளகினாலும் தலைச்சுற்றல் போல இருக்கும். மயக்கம் உண்டாகும்.

மருந்து : ஓரிலைதாமரைவேர்விஷ்ணுகிரந்திவேர்சீதேவிசெங்கழுநீர்புலிச்சுவடிசிற்றாமுட்டிவேர்வல்லாரை இவைகளை கசாயமிட்டு கஞ்சி வைத்து கொடுக்கவும்.

இளக்குமுறை 3 : (பிராண அடக்கம்)
சீறுங்கொல்லி வர்மம் கொண்டால் கழுத்தில் புறந்தலைக்குழியில் (பேன்குழி) கையை வைத்து இருத்த வேண்டும். உடன் இளகும்.


மருத்துவப்பயன் :
      (1)  இவ்வர்மம் சுழுமுனை நாடியின் இணைவர்மங்களுள் ஒன்று. இதை பயன்படுத்தி சுழுமுனை நாடியையும்அதில் இயங்கும் வாயுவின் செயல்பாட்டையும் சீர்படுத்தலாம்.
      (2) ஆதார வர்மங்களில் இது ஆக்கினை வர்மமாகும். இதைக்கொண்டு ஆக்கினை சக்கரத்தின் செயல்பாட்டைத் தூண்டலாம். இதன் மூலம் ஆகாய பூத குறைபாடுகளை சீர்செய்யலாம்.
      (3) தலை-கழுத்து வர்ம தடவு முறைகளில் பயன்படுகிறது.


நன்றிடாக்டர்..கண்ணன் ராஜாராம்கன்னியாகுமரி

Sunday, March 25, 2012

வர்ம புள்ளிகள்

வர்ம புள்ளிகள் 1
வாழ்க! வளமுடன்!


உடலின் பக்கவாட்டு வர்மம் (அடப்பம் சார்ந்த வர்மம்)



அடப்ப காலம்: மனதில் மறைந்து இருக்கும் மாயை அடங்கி இருக்கும் பகுதி அடப்ப காலம். ஆஸ்மா தாக்குதல் உடனே சரியாகும். இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும்.
வெள்ளீரல் வர்மம்: நுரையீரலுக்கு ஆற்றலை செலுத்தும்.
காரீரல் வர்மம்: ஈரலுக்கு ஆற்றலை செலுத்தும்.
ஜடபிறழ் வர்மம்: கால்களுக்கு ஆற்றலை கொடுக்கும்.
வயிறு சார்ந்த வர்மம்

சடபிறழ் வர்மம்: ?
கைக்கட்டி வர்மம: குடல் புண்ணை ஆற்றும்
முடெல் வர்மம்: ?
பள்ள வர்மம்: ஜீரண சக்தி பெருகும், முறையற்ற மாதவிலக்கு சரியாகும், சினைப் பை கட்டிகள் சரியாகும். இன உறுப்பு தொடர்பான மற்ற சில சிகிச்சைகளுக்கு பயன் படுகிறது.
சிறிய அத்தி சுருக்கி (படுவர்மம்): ஆண்களின் மலட்டுதன்மையை சரி செய்ய பயன் படுகிறது.
வலிய அத்தி சுருக்கி(படுவர்மம்): ரகசியம்.
எட்டெல் வர்மம்: எலும்புகள் தொடர்பான பிணிகளை போக்கும். டைபாய்ட், சிக்கன் குனியா சிகிச்சைக்கு பயன் படும்.
அக்குள் சார்ந்த வர்மம்


கைக்கூட்டு வர்மம்: சர்கரை வியாதிக்கு.
பிறதாரை வர்மம்(அடங்கல்) பக்கவாதத்திற்கு, செயல் இழந்த கைகளை செயலாக்கும். கைகளை மேலே தூக்கவைக்கும்.
உள்குத்து வர்மம்: அதிக இரத்த அழுத்தத்தை சமப்படுத்தும்.
உள்புற்று வர்மம்: குறைந்த இரத்த அழுத்தத்தை சமப்படுத்தும்
எந்திக் காலம்: (வர்ம திறவுக் கோல்) மேலே தூக்கிய கைகளை கீழே இறக்கும்.
அடிவயிறு சார்ந்த வர்மம்

மூத்திர காலம்: மலமும், ஜலமும் வெளியேறும்.

கல்லிடை காலம்: மூத்திரை பை சுத்தப்படும், புரோஸ்டேட் சுரப்பி சீராகும் (இது 95 வயது வரை நன்கு வேலை செய்யும்). ஆண், பெண் இன உறுப்புகள் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
வலம்புரி காலம்: சிறு நீர் தாரை தொற்று நீங்கி சீர்படும்.
இடம்புரி காலம்: சிறு நீரகம் ஊக்கி விடப்படும், (Cure for Renal failure) "டயாலிஸில் இருப்பவருக்கும் இது வேலை செய்யும்.
தண்டு வர்மம் (ஆண்): குறையில்லாத உயிரணு உற்பத்தி அதிகரிக்கும், ஆண்களுக்கு வீர்யம் அதிகமாகும். உறுப்பு பலம் பெறும்.
குடுக்கை வர்மம் (பெண்): மாதவிலக்கு சீராகும், PMS சரியாகும், நீர் கட்டிகள் சரியாகும். ஹார்மோன் உற்பத்தி சீராகும்.
வித்து வர்மம்: விதையேற்றம் சரியாகும், Varicose vain சரியாகும். தொடக்க நிலை விதை வீக்கம் சரியாகும்.
அண்ட காலம்: அடி வயிற்று வலி சரியாகும், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், அதிக துடிப்புள்ள குழந்தைகள் சரியாகும். உடல் சூட்டை சரிசெய்யும், நுரையீரலுக்கு பலம் தரும்.
கண்கலக்கி வர்மம்: கண்களுக்கு ஆற்றல் பெருகும். கண் சிவப்பு நீங்கும். கண் சூட்டை குறைக்கும்.
ஆணிக்காலம்:கண்களுக்கு ஆற்றலை கொடுக்கும். கண் சூட்டை குறைக்கும், தண்டுவட வலிகள் நீங்கும்.
முதுகு சார்ந்த வர்மம்

சுழியாடி வர்மம:தோள், கைகளுக்கு இரத்த ஓட்டம் சரியாகும், கழுத்து வலி நீங்கும், மூளை சுறுசுறுப்படையும்.
முடிச்சு வர்மம்: கழுத்து வலி, ஆன்மீகத்தில் பயன் படும், சிவப்பு தந்திரத்தில் இதை “பொன் நெட்டி” என சொல்வார்கள். மன நோய் சரியாகும்.
கைசுளுக்கி வர்மம்: தோள் பட்டை வலி சரியாகும். கைகளில் உள்ள வலி நீங்கும். மேல் தாரை வலி நீங்கும்.
சிப்பி வர்மம்: தோள் பட்டை எலும்புக்கும் சவ்வுக்கும் எண்ணை பசையை கொடுக்கும்.
நட்டெல் வர்மம்: உடலின் ஆற்றலை தலைக்கு எடுத்து செல்லும், பஞ்ச வர்ண குகையில் உள்ள உறுப்புகளுக்கு ஆற்றலை கொடுக்கும். முதுகு எலும்பு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். கை, கால் பலம் பெறும், வாத நோய் நீங்கும்.
பூணூல் காலம்: வாந்தி, இரத்த வாந்தி, எதிரிகளால் வரும் “நெகட்டிவ் அலைஅதிர்வை” தடுக்கும். அனைத்து விதமான நரம்பு தளர்ச்சியும் நீங்கும், குளிர் மாறும், உடல் சூடு ஏற்படும்.
வாயு காலம்: வர்மத்தின் தலையாய வாய்வு ஆன “வியானன்” இங்கு அமர்ந்து இருக்கும், வாயு பிடிப்பை சீராக்கும். சர்கரை வியாதியை சரிசெய்யும். இடுப்பு சதை வலியை போக்கும்.
நங்கணா பூட்டு: கால்களுக்கு ஆற்றலை செலுத்தும். கால்களுக்கு இரத்த ஓட்டம் சரிப்படும்
பேரெல் வர்மம்:?

கால் சார்ந்த வர்மம்

உள்ளங்கால் வெள்ளை வர்மம்:
அனைத்து நரம்பு சிக்கல்களும் சரியாகும், இடுப்பு வலி நீங்கும், உடல் சூடு குறையும், உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.


சூண்டிகை காலம்:
காலில் உள்ள சோர்வு நீங்கும்.
விருத்தி காலம்: காலில் உள்ள அனைத்து நரம்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராகும்.
படங்கால் வர்மம்: கால பாததத்தில் உள்ள் சிறு நரம்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராகும்.
கண்புகைச்சல் வர்மம்: கை, கால் பலம் பெறும். காலுக்கு உறுதி கிடைக்கும்.
உப்புக் குத்தி வர்மம்: வில் நரம்பு பலம் பெறும், காலுக்கு உறுதி கிடைக்கும்.
குதிக்கால் வர்மம்: கால்வலி சரியாகும்.
கொம்பேறிக்காலம்: ?
குதிரை முக வர்மம்: முழங்காலுக்கு பலத்தை கொடுக்கும்.
மூட்டு வர்மம்: மூட்டு தொடர்பான அனைத்து வலிகளும் நீங்கும்.
ஆமைக்காலம்: சர்கரை வியாதி சரியாகும்.
உள் தொடை வர்மம்: காலில் உள்ள வலியை குறைக்கும். இரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.

Saturday, January 28, 2012

வர்மத்தின் மர்மங்கள்

வர்மத்தின் மர்மங்கள்



அகத்தியர்பெருமனால் வகுத்துரைக்கப் பட்ட, மாபெரும் தத்துவங்களைக் கொண்ட அடங்கல் முறைகள் அனைத்து நோய்களையும் 18 அடங்கலாக ஒடுக்கி, அதற்கு தீர்வு காணும் முறைகள்தான் அடங்கல் முறைகள். இந்த 18 அடங்கல்களுள் 108 வர்மத்தின் செயல்பாடுகளும் அடங்கியுள்ளன. இது இந்திய மருத்துவ முறைகளில் மாபெரும் வலிமையும், தீர்க்கமும் கொண்ட சிகிச்சை முறையாகும்.

உடலில் உள்ள அங்க அவையங்களில் அடங்கி ஒடுங்கியிருக்கும் அற்புதமான சக்தி நிலை, ஒடுங்கியிருக்கும் உயிர்நிலை ஓட்டத்தினை அகத்தியர் பெருமான் தெள்ளத் தெளிவாகக் கூறியிருப்பதன் காரணம், மனிதர்களுக்கு உண்டாகும் எந்த ஒரு நோய்க்கும், அது சம்பந்தப்பட்ட அடங்கல் பாதித்திருக்கும் என்பதுதான் உண்மை நிலை என்பதை கண்டறிந்த அகத்தியர் அடங்கல் நிதானம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நோயைக் கணித்துக் கூறுவதற்கு முன் அந்த நோய்க்கு தொடர்புடைய வர்மப் புள்ளிகள், அடங்கல்கள், எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை ஒரு மருத்துவர் கவனிக்க வேண்டியது முதல் கடமையாகும்.

பொதுவாக அடங்கல்கள் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தின் உடற் கூறுகளுக்கு தகுந்தவாறு அந்த அடங்கல்களின் பரிணாம செயல் பாடுகளிலிருந்து அறிந்து கொள்வார்கள்.

எப்படி கல்லீரல் பாதித்தால், உள்ளங்கை அடங்கல் பாதித்திருக்கிறது என்று ஒரு வர்ம மருத்துவரால் கணித்துக் கூற முடிகிறதோ, அதுபோல், நோயின் குறிகுணங்களைக் கொண்டு எந்த அடங்கல் பாதித்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இதிலிருந்து நோய்களுக்கும் அடங்கல் களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது உண்மையாகிறது.

பழங்காலத்தில் வர்ம மருத்துவர்கள் எந்தக் கருவிகளும் இல்லாமல், அடங்கல் மூலம் நோய்களையும், நோய்கள் மூலம் அடங்கலையும் கணித்து அதற்குத் தகுந்தவாறு மருத்துவம் செய்து வந்துள்ளனர்.

இன்றும் வர்ம மருத்துவர்கள் நோயின் குறிகுணங்களை அடங்கல் பரிகார முறையில் நோய்களைக் கணித்து அதற்குத் தகுந்தவாறு, மருந்து மாத்திரைகள் கொடுத்து, நோய்களைத் தீர்த்து வருவது காலம் அறிந்த உண்மை.

சில சமயங்களில் மனம் பாதிக்கும் அளவுக்கு நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் அதனாலும் அடங்கல்கள் பாதிக்கப்பட்டு அதுவே நோயாகவும் மாறுகிறது. அதுபோல், புறச் சூழ்நிலைகளாலும், அடங்கல் பாதிக்கப் படலாம்.

இப்படி மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படும் இனம் புரியாத நோய்களுக்கு அடங்கல் முறைகள் மூலம் அவற்றின் பாதிப்புகளைக் கண்டறிந்து குணப்படுத்துவதே வர்ம மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.