Saturday, April 13, 2013

காகபுசுண்டர் ஞானம் 80-5


தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால் சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு ஊனென்ற பசிதீரும் கோபம் போகும். உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத் தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந் திரிவாரே உச்சிநடுச் சென்ற போது கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங் கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே. 16 பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப் பாடுவா னொருகாலைத் தாழ விட்டே ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய் என்மகனே மதியென்ப ததற்குப் பேரு கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா கண்டுபார் ரவியென்று கருத லாகும் மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும் மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே. 17 பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப் பார்தனிலே அறுபத்து நாலு யோகம் ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே. 18 காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன் தோணாமல் நானலைந்து சிறிது காலம் துருவமென்ற பிரமத்தை யடுத்துக்கேட்க நாணாமல் அண்டவுச்சி தன்னி லேதான் நாடியே மனத்தாலே நாட்ட மாகக் கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக் கூசாமல் மனமொன்றா யிருத்தி னேனே. 19 இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய் நிருத்தியே வெகுகோடி கால மட்டும் நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும் பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப் பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா! கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக் காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே. 20 விளையாடிப் போதமய மாக வுந்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி அலையாம லாரொருவ ருறவு மற்றே ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி மவுனமென்று மந்தனையு மடக்கி நில்லே. 21 நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான் வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள் மந்திரங்கள் கோடானு கோடி யென்றும் சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந் திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான் வேரற்ற மரம்போலே விழுவார் பாரே. 22 பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப் பார்த்தீப லிங்கத்தைப் பணியா மற்றான் வீரப்பா நீராட்டிப் பூசை செய்து வீணர்கள்தாம் கத்தபம்போற் கதறு வார்கள் தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு காரப்பா மனங்கொண்டு பரத்தி னூடே கண்டவரே கயிலாசத் தேகந் தானே. 23 தானென்ற பிரமத்தை யடுத் திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும் உதயகிரி பாராத வுலுத்த மாடு வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக் கோனென்ற குருபாதம் அடைய மாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே. 24 பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப் பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும் அடயோக மென்பார்க ளாகா தப்பா! சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும் வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது வெட்டாத சக்கரத்தை யறிய லாமே. 25 அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும் அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும் பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும் விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக் குறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே. 26 தாமென்ற உலகத்தில் மனித ரோடே சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே. 27 விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலையாகும் விரும்பிப் பாரு மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்; அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக் கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு கபடமற்ற தேகமடா கண்டு பாரே. 28 கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக் கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும் தண்டுமுண்டு செய்யாதே மனம்வே றானால் தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய் தொண்டுசெய்து பெரியோரை யடுத்து மைந்தா தொழுதுநீ யென்னூலை யன்பாய்க் கேளு விண்டுமவர் சொலாவிட்டா லிந்நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப் பாரே. 29 பாரப்பா விஞ்சைமந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா! ஆரப்பா சென்றேறிப் பார்க்கும்போது அதீதமுள்ள விஞ்சைமந்த்ரம் அனந்தங் காட்டும்; நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள் நிமிடத்திற் செய்திடுவாய் நிலையைக் கண்டால் வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும் வேறில்லாக் கனிதனையு முண்க லாமே. 30 உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந் திங்கலாந் தோணுமடா அமர்தச் சீனி தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா! தங்கலாந் தேகமது அறியா மற்றான் சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே. 31

No comments:

Post a Comment